17 வயது சிறுவனை இதற்காக தான் கொன்றேன்! 5 துண்டாக வெட்டி கூறுபோட்ட பயங்கரம்.. ஆட்டோ டிரைவர் கைது.!

By vinoth kumar  |  First Published Sep 1, 2023, 8:16 AM IST

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை செம்பூர் பகுதியை சேர்ந்தவர் ஷபீக் அகமது ஷேக் (33) ஆட்டோ டிரைவர். இதே பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வர் அவாத்(17).


மும்பையில் 17 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்து உடலை ஐந்து துண்டுகளாக வெட்டி கூறுபோட்ட சம்பவம் தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை செம்பூர் பகுதியை சேர்ந்தவர் ஷபீக் அகமது ஷேக் (33) ஆட்டோ டிரைவர். இதே பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வர் அவாத்(17). இவர் ஷேக்கின் மனைவி மற்றும் சகோதரியுடன், சகோதரனைப் போல நீண்ட காலமாக பழகி வந்துள்ளார். அப்படி இருந்த போதிலும் சிறுவனை தனது மனைவி மற்றும் மைத்துனர் குறித்து அடிக்கடி புகார் கூறி வந்துள்ளார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- பக்கவாக ஸ்கெட்ச் போட்டு கணவரை போட்டு தள்ளிவிட்டு நாடமாடிய மனைவி.. சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்!

இதனால், ஆத்திரமடைந்த ஷபீக் அகமது ஷேக் சிறுவனை கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர், அவரது உடலை  ஐந்து துண்டுகளாக வெட்டி  கூறுபோட்டு  அந்த பையை  வீட்டு சமையல் அறையில் மறைத்து வைத்தார். இதனிடையே, மகனை காணவில்லை என பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சிறுவன் கடைசியாக ஷேக்குடன் சென்றது தெரிய வந்தது.

இதையும் படிங்க;- அடேங்கப்பா.. செப்டம்பர் மாதத்தில் பள்ளிகளுக்கு இத்தனை நாட்கள் விடுமுறையா? குஷியில் மாணவர்கள்..!

இதனையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் ஈஸ்வரை கொலை செய்ததை ஷேக் ஒப்புக்கொண்டார். பின்னர், சமையலையில் ஐந்து துண்டுகளாக வெட்டி கூறுபோட்ட நிலையில், ஈஸ்வர் உடல் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஷபீக் அகமதுவை போலீசார் கைது செய்துள்ளனர்.

click me!