மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியை 13 வயது சிறுமி. அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்துள்ளார். தந்தை இறந்த நிலையில் தாய் தனியாக சென்றதால் பாட்டி பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார்.
13 வயது சிறுமிக்கு தினமும் தூக்க மாத்திரை கொடுத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தாய், சித்தி உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியை 13 வயது சிறுமி. அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்துள்ளார். தந்தை இறந்த நிலையில் தாய் தனியாக சென்றதால் பாட்டி பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார். இந்நிலையில், பள்ளி கோடை விடுமுறையின் போது மகளை தேடி வந்த தாய், விடுமுறை முடியும் தன்னுடன் இருக்குமாறு கூறி மகளை தன்னுடன் அழைத்து சென்றுள்ளார்.
அந்த வீட்டில் சிறுமியின் பெரியம்மா, சித்தி ஆகியோரும் இருந்தனர். தினமும் இரவு சிறுமிக்கு தூக்க மாத்திரியை கொடுத்து தூங்க வைத்தனர். தூங்கிய பின் அந்த சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளனர். தினமும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி ஒரு வழியாக தாயிடம் தப்பித்து பாட்டியின் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு தனக்கு நேர்ந்த கொடுமைகளை தனது பாட்டியிடம் கூறி கதறி அழுதுள்ளார்.
இதை கேட்டு சிறுமியின் பாட்டி அதிர்ச்சி அடைந்து தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் தாய், சித்தி, பெரியம்மா ஆகியோர் விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இந்தத சம்பவம் தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.