குடித்துவிட்டு மனைவிடம் அடிக்கடி தகராறு; 18 இடங்களில் வெட்டி படுகொலை செய்த இளம் பெண்ணின் சகோதரர்

By Velmurugan s  |  First Published Jun 17, 2023, 12:40 PM IST

சாத்தான்குளத்தில் குடும்பத்தகராறு காரணமாக வீட்டில் தனியாக இருந்த இளைஞருக்கு 18 இடத்தில் பலத்த அரிவாள் வெட்டு. மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. மனைவியின் சகோதரர் வெறிச்செயல்.


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் செட்டியார் கீழத்தெரு பகுதியை சேர்ந்தவர் துரைமுருகன் என்பவர் மகன் சிவசூர்யா (வயது 25). சிவசூர்யாவும், சாத்தான்குளம் வடக்கு ரத வீதியைச் சேர்ந்த சங்கரன் மகள் முத்துலட்சுமியும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

சிவசூர்யா அடிக்கடி மது அருந்திவிட்டு முத்துலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த முத்துலட்சுமி தனது குடும்பத்தினரிடம் இது பற்றி கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிவசூர்யா மீது புகாரும் அளித்துள்ளார்.

Tap to resize

Latest Videos

undefined

தண்ணீருக்கு பதிலாக ஸ்பிரிட்டை குடிக்க கொடுத்த தாய்; பரிதாபமாக உயிரிழந்த சிறுமி

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்த நிலையில் சிவசூர்யா அடிக்கடி முத்துலட்சுமியின் சகோதரருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு எனது மனைவியை என்னுடன் சேர்த்துவை என்று கூறி தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று வழக்கம் போல கொத்தனார் வேலைக்கு சென்று விட்டு வீட்டில் தனியாக இருந்த சிவசூர்யா மனைவியின் சகோதரருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து திடீரென்று அங்கு வந்த முத்துலட்சுமியின் சகோதரர் வெங்கடேசன் வீட்டில் தனியாக இருந்த சிவசூரியாவை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். பின்னர் வீட்டை வெளியில் பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. அருகில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு வீட்டிற்கு சென்று பார்த்த போது சிவசூர்யா ரத்த வெள்ளத்தில் துடி துடித்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பெற்றோர் எதிர்ப்பால் காதல் ஜோடிக்கு கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் டும் டும் டும்

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி சிவசூர்யா பரிதாபமாக உயிரிழந்தார். சிவசூர்யாவின் உடலில் 18 இடங்களில் கொடூரமாக அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிய வெங்கடேசனை சாத்தான்குளம் துணை காவல் கண்காணிப்பாளர் அருள் தலைமையிலான  போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். குடும்பத் தகராறு காரணமாக சகோதரியின் கணவரை அறிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!