தகாத உறவு வைத்துக்கொண்ட மாமியார்... தட்டிக்கேட்ட மருமகளுக்கு நேர்ந்த அவலம்!!

Published : Mar 10, 2022, 09:34 AM IST
தகாத உறவு வைத்துக்கொண்ட மாமியார்... தட்டிக்கேட்ட மருமகளுக்கு நேர்ந்த அவலம்!!

சுருக்கம்

கேரளாவில் மாமியாரின் தகாத உறவை தட்டிக்கேட்ட மருமகளை மாமியாரின் கள்ளக்காதலன் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கேரளாவில் மாமியாரின் தகாத உறவை தட்டிக்கேட்ட மருமகளை மாமியாரின் கள்ளக்காதலன் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். தற்போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பல பகுதிகளில் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். வெளியேதான் அப்படி என்றால் வீட்டிலும் பெண்களுக்கு டிசைன் டிசைனாக பிரச்சனைகள் வருகிறது. தற்போது கள்ளக்காதல் பெருகி வருகிறது. அந்த வகையில் கேரளாவில் ஒரு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம்  பெரும்பாபூர் பகுதியை சேர்ந்தவர் வைஷ்ணவி. பொறியியல் 4ஆம் ஆண்டு  படித்து வரும் இவர் 6 மாதங்களுக்கு முன்பு முகேஷ் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். 

இவர் மாமியார் வீட்டில் தங்கி இருந்த நிலையில் தன்னுடைய மாமியாருக்கும் அதே பகுதியில் உள்ள மற்றொருவருக்கும் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. வைஷ்ணவி வீட்டில் இருக்கும்போதே அந்த நபர் மாமியாரைப் பார்க்க அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மருமகள், இது குறித்து மாமியாரிடம் கேட்டுள்ளார். இது இருவருக்கும் இடையே சண்டியை ஏற்படுத்தியது. இந்த சண்டை முற்றியதை அடுத்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வழக்கம் போல மாமியாரை பார்க்க வந்த அந்த நபரை வீட்டிற்குள் விடாமல் வைஷ்ணவி தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர் வைஷ்ணவியின் முகத்தை பலமாக தாக்கியுள்ளார்.

இதில் வைஷ்ணவியின் முகம் உருகுலைந்தது. முகம் வீங்கிய நிலையில் கண் அருகே காயமானது. இதை அடுத்து வைஷ்ணவி  உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கணவர் வேலைக்கு சென்றதும் மாமியார் தன்னை ஒரு அறையில் வைத்து பூட்டி விடுவார் என்றும் தண்ணீர் கேட்டால், டாய்லெட் தண்ணீரை குடித்துக்கொள் என்று கூறி விடுவார் என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியிக் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!