அடித்து உதைத்து சித்திரவதை செய்ததால் மாமியாரை கழுத்தறுத்து கொன்றேன்.. மருமகள் பகீர் வாக்குமூலம்..!

Published : Apr 26, 2022, 02:39 PM IST
அடித்து உதைத்து சித்திரவதை செய்ததால் மாமியாரை கழுத்தறுத்து கொன்றேன்.. மருமகள் பகீர் வாக்குமூலம்..!

சுருக்கம்

எனக்கும், மாமியாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சில நேரத்தில் என்னை அடித்து துன்புறுத்துவார். நான் அனைத்தையும் பொறுத்து கொண்டேன். அவரது சித்திரவதை நாளுக்கு நாள் அதிகரித்தது. அதனால், அவரை பலமுறை கொலை செய்ய திட்டமிட்டேன். 

செங்கல்பட்டு அருகே மருமகளை தரக் குறைவாக பேசி கொடுமைப்படுத்திய மாமியாரை மருமகள் மற்றும் அவரது குடும்பத்தினரை் கழுத்தறுத்து கொலை செய்த  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மாமியார் கொலை

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் மேட்டு தெருவை சேர்ந்தவர் பத்தே சந்த் (78). திருக்கழுக்குன்றம் பஜார் வீதியில் அடகுக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி பிரேம் கன்வர் (70). இவர்களது மூத்த மகன் கணபதி லால் (51), குடும்பத்துடன் சென்னையில் வசிக்கிறார். 2, 3வது மகன்கள் சுனில் லால் (47), பிண்டுகுமார் (44) ஆகியோருக்கு திருமணமாகி, அதே பகுதியில் வசிக்கின்றனர். கடைசி மகன் கமலேஷ்குமார் (40) பெற்றோருடன் வசிக்கிறார். 

நேற்று முன்தினம் காலை பத்தே சந்த், மகன்கள் சுனில் லால், பிண்டுகுமார் ஆகியோர் கடைக்கு சென்றனர். பிரேம் கன்வர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இரவு 7 மணியளவில் பத்தே சந்த் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் முதல் தளத்தில் உள்ள அறையில் ரத்த வெள்ளத்தில் பிரேம் கன்வர் சடலமாக கிடந்தார். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்  பிரேம் கன்வர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மருமகள்

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, 3வது மகன் பிண்டுகுமாரின் மனைவி சுஜாதா (27), காலில் காயமடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது தெரிந்தது. போலீசார், அங்கு சென்று விசாரித்தனர். அப்போது, முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் தீவிரமாக விசாரித்தனர். அதில், நான்தான், மாமியார் பிரேம் கன்வரை கொலை செய்தேன் என சுஜாதா ஒப்புக் கொண்டார்.

மாமியார் மருமகளுக்கு அடிக்கடி தகராறு

இதையடுத்து அவரை, காவல் நிலையம் அழைத்து சென்று, கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில், எங்களது குடும்பத்தில் 2 மூத்த மருமகள்கள் மீது, என் மாமியார் பிரேம் கன்வர் பாசம் காட்டுவார். என் மீது கோபப்படுவார். இதனால், எனக்கும், மாமியாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சில நேரத்தில் என்னை அடித்து துன்புறுத்துவார். நான் அனைத்தையும் பொறுத்து கொண்டேன். அவரது சித்திரவதை நாளுக்கு நாள் அதிகரித்தது. அதனால், அவரை பலமுறை கொலை செய்ய திட்டமிட்டேன். இதுபற்றி, பீகாரில் வசிக்கும் எனது மாமா மகன்கள் சுமித், தீபக் ஆகியோரிடம் தெரிவித்தேன். அவர்களுடன், பிரேம் கன்வரை கொலை செய்ய திட்டமிட்டேன். அதன்படி சுமித், தீபக் ஆகியோர் கடந்த 2 நாட்களுக்கு முன் எனது வீட்டுக்கு வந்தனர். அவர்களை வேறு இடத்தில் தங்க வைத்தேன்.

பின்னர், திட்டமிட்டபடி வீட்டில் யாரும் இல்லாதபோது, சுமித், தீபக் ஆகியோரை வரவழைத்து பிரேம் கன்வரின் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்தோம். பின்னர், வீட்டின் மாடிக்கு சென்று தப்பிக்க நினைத்தோம். அவர்கள், எங்களது வீட்டின் மாடியில் இருந்து பக்கத்து மாடிக்கு தாவி குதித்தனர். நான் குதிக்க முயன்றபோது தவறி கீழே விழுந்தேன். அதனால் காலில் அடிப்பட்டது என வாக்குமூலம் அளித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

பெற்ற குழந்தையை கொன்ற கொடூர தாய்.. கோர்ட் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு.. கள்ளக்காதலன் எஸ்கேப்..
லெஸ்பியன் உறவு! மால்தி தேவியுடன் மனைவி உல்லாசம்! நேரில் பார்த்த கணவர்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!