
செல்போன் செயலி மூலம் பெண் குரலில் பேசி கனடா வாழ் இந்தியரிடம் 1.38 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் சென்னையை சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் பவானியில் சேர்ந்தவர் பச்சையப்பன் (42) இவர் கனடாவில் தங்கி பணியாற்றி வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர் கடந்த 2009ஆம் ஆண்டு பச்சையப்பனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் இருவரும் சேர்ந்து வாழ்வதாக ஏற்பட்ட சமரசத்தின் அடிப்படையில் அவர்களது வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது.
பச்சையப்பன் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த சமயத்தில் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. அப்போது மேட்ரிமோனியில் அவர் விவாகரத்து அல்லது கணவனை இழந்த பெண்கள் தேவை என பதிவிட்டார். அப்போது அவரது கைப்பேசிக்கு செந்தில் பிரகாஷ் என்பவர் செல்போனில் தொடர்பு கொண்டதுடன், தான் சென்னையை சேர்ந்தவர் என்றும், தனக்கு ராஜேஸ்வரி என்ற தங்கள் இருப்பதாகவும், கணவனை இழந்த தன் தங்கை தங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறியுள்ளார். இதைக் கேட்ட உற்சாகமடைந்த பச்சையப்பன், ராஜேஸ்வரியை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். இந்நிலையில் செந்தில் பிரகாஷ் மோபைல் ஆப் மூலம் பெண் குரலில் பேசி சிறுக சிறுக பச்சையப்பனிடமிருந்து 1.38 கோடி ரூபாய் கறந்துள்ளார்.
இந்நிலையில் ராஜேஸ்வரியை சந்திக்க கனடாவிலிருந்து 3 லட்சம் மதிப்புள்ள பரிசு பொருட்களுடன் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு வந்து தங்கிய பச்சையப்பன், தங்களை சந்திக்க விலையுயர்ந்த பரிசுப் பொருட்களுடன் வந்துள்ளேன் எனவே ஓட்டல் அறைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். அப்போது பெண் குரலில் பேசி மோசடி செய்து வந்த செந்தில் பிரகாஷ் பச்சையப்பனை சந்திக்க ஓட்டல் அறைக்கு வந்ததுடன் அவரை மிரட்டி அவர் கொண்டு வந்த பரிசுப் பொருட்களை அபகரித்ததுடன், அவரை மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த பச்சையப்பன், மீண்டும் கனடாவுக்கே திரும்ப சென்றார்.
இந்நிலையில்தான் தனது மனைவியுடன் சமரசம் ஏற்பட்டதை அடுத்து பச்சையப்பன் பிரிந்திருந்தபோது தனக்கு நடந்தவற்றை தனது மனைவியிடம் கூறினார். இந்நிலையில் மனைவியின் ஆலோசனைப்படி அவர் தான் மோசடி செய்யப்பட்டது குறித்து ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். விசாரித்த போலீசார் பெண் குரலில் பேசி பணத்தை மோசடி செய்ய பெரம்பூரில் சேர்ந்த செந்தில் பிரகாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.