10க்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை... தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது!!

By Narendran S  |  First Published Apr 1, 2022, 10:14 PM IST

கள்ளக்குறிச்சி அருகே 10க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பொறுப்பு தலைமை ஆசிரியரை போக்சோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


கள்ளக்குறிச்சி அருகே 10க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பொறுப்பு தலைமை ஆசிரியரை போக்சோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அண்மை காலமாக அதிகரித்து வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக, தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. பள்ளி வளாகங்களில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், பெற்றோர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சமூகத்தின் மத்தியிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக உள்ளன. அதைத் தடுக்க வேண்டிய காவல் துறையிலும், உயர் அதிகாரிகள் மூலம் பெண் காவலர்கள் முதல் காவல் கண்காணிப்பாளர் நிலையிலுள்ள அதிகாரி வரையிலும் பாதிப்புக்குள்ளாகும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

Tap to resize

Latest Videos

இது ஒருபுறம் இருக்க மறுப்புறம் சிறுமிகள், பள்ளி மாணவிகள் முதல் கல்லூரி மாணவிகள் வரை பாலியல் தொல்லைக்கு ஆளாகி வருகின்றன. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் பாலியல் குற்றங்கள் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. அதற்கு சாட்சியாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை மாணவி தான் படிக்கு பள்ளி ஆசிரியர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி தற்கொலை செய்துக்கொண்டார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து ஆங்காங்கே பல்வேறு குற்றங்கள் அன்றாடம் எங்கோ ஒரு பகுதியில் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி அருகே 10க்கும் மேற்ப்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி பொறுப்பு தலைமை ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு அந்த பள்ளியை சேர்ந்த பொறுப்பு தலைமை ஆசிரியர் துளசிராமன் என்பவர் பாலியல் தொல்லை தந்ததாக புகார் எழுந்தது. வானவரெட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்த துளசிராமன், தொடர்ந்து நான்காம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரை அடுத்து காவல்துறையினர், பொறுப்பு தலைமை ஆசிரியர் துளசிராமனை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 

click me!