பள்ளியில் மீண்டும் ஒரு விபத்து...! மாணவன் காயம்...! பெற்றோர் அதிர்ச்சி

Published : Apr 01, 2022, 05:22 PM ISTUpdated : Apr 01, 2022, 05:32 PM IST
பள்ளியில் மீண்டும் ஒரு விபத்து...! மாணவன் காயம்...! பெற்றோர் அதிர்ச்சி

சுருக்கம்

அங்கன்வாடி கட்டிடத்தில்  மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவத்தில் 2 சிறுவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேன் மோதி சிறுவன் பலி

சென்னை விருகம்பாக்கம் இளங்கோவன் நகரை சேர்ந்தவர் வெற்றிவேல். இவரது மனைவி ஜெனிபர். இவர்களின் மகன் தீக்சித்(7) என்பவர் வளசரவாக்கம் அருகே உள்ள ஆழ்வார் திருநகர் பகுதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் படித்து வந்தார். கடந்த 28ம் தேதி பள்ளிக்கு சென்ற சிறுவன் மீது வேன் மோதியதில்  பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து  சிறுவன் மீது வாகனத்தை மோதிய  ஓட்டுநர் பூங்காவனம் மற்றும் குழந்தை கவனிப்பாளர் ஞானசக்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெற்றோர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து தமிழக அரசு அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது, அதில்  பள்ளி பேருந்தில் மாணவர்களை இருப்பிடத்திலிருந்து அழைத்து வரும் போது பேருந்தில் உதவியாளர் ஒருவர் இருக்க வேண்டும். பள்ளி வாகனத்தில் மாணவர்கள் பள்ளிக்கு வந்ததும், அனைவரும் இறங்கி விட்டார்களா? என்று உறுதி செய்த பிறகே வானகத்தை அந்த இடத்தை விட்டு நகர்த்த வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டு்ப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

அங்கன்வாடி கட்டிடம் இடிந்து விபத்து

இந்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திருந்த நிலையில் மற்றொரு நிகழ்வு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுக்கா பூனி மாங்காடு காலனியில் 35 மாணவர்கள் படிக்கும் அங்கன்வாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின்  மேற்கூரை திடீரென  இடிந்து விழுந்த சம்பவம் பெற்றோர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்போது  பள்ளியில் இருந்த சிறுவன் விமல்ராஜீக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு  திருத்தணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதித்தனர்.  மேலும் அதே பள்ளியில் அங்கன்வாடியில் இருந்து தீரன் என்று மற்றொரு மாணவனும் சிறிய காயத்துடன் தப்பியுள்ளார்.  மேலும் பள்ளி கட்டிடத்தின் மேல்கூறை இடிந்து விழுந்து விடும் போது பள்ளியில் 25 மாணவர்கள் இருந்துள்ளனர் அவர்கள் இந்த விபத்தில் சிக்காமல் அதிர்ஷ்டவசமாக தப்பி உள்ளனர்.

2 சிறுவர்கள் காயம்

 அங்கன்வாடி கட்டிடத்தின் மேல் கூறை இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த சம்பவ இடத்தில் வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர். பழுதடைந்த அங்கன்வாடி கட்டடத்தை உடனடியாக அகற்றி புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்று  அங்கன்வாடி பள்ளியில் உள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். தமிழக முதலமைச்சர் டெல்லியில் உள்ள பள்ளிகளை பார்வையிட்டு வந்த நிலையில் தமிழகத்தில் பழைய அங்கன்வாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த சம்பவம் பெற்றோர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி