ஐயோ அம்மா என்ன காப்பாத்துங்க.. பட்டப்பகலில் பொதுமக்கள் மத்தியில் திமுக பிரமுகர் ஓடஓட விரட்டி படுகொலை..

By vinoth kumarFirst Published Jan 28, 2022, 8:19 AM IST
Highlights

கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள நாகம்மாபுதூர் பகுதியை சேர்ந்த சுந்தரம்(55). இவருக்கு கருப்புசாமி, சரவண சுந்தரம் என 2 மகன்கள் உள்ளனர். இளைய மகன் சரவண சுந்தரம்(19) பைனான்ஸ்,  சிட்பண்ட்  நடத்தி வந்தார். இவருக்கும் பிள்ளையப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த பகவான்ஜி (எ) தமிழ்ச்செல்வன்(26) என்பவருக்கும் கொடுக்கல் வாங்கலில் தகராறு இருந்து வந்துள்ளது. 

கோவையில்  பட்டப்பகலில் பைனான்சியர் ஒருவர் ஓட, ஓட விரட்டி அரிவாளால் வெட்டிக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள நாகம்மாபுதூர் பகுதியை சேர்ந்த சுந்தரம்(55). இவருக்கு கருப்புசாமி, சரவண சுந்தரம் என 2 மகன்கள் உள்ளனர். இளைய மகன் சரவண சுந்தரம்(19) பைனான்ஸ்,  சிட்பண்ட்  நடத்தி வந்தார். இவருக்கும் பிள்ளையப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த பகவான்ஜி (எ) தமிழ்ச்செல்வன்(26) என்பவருக்கும் கொடுக்கல் வாங்கலில் தகராறு இருந்து வந்துள்ளது. 

இந்நிலையில் நேற்று மதியம் அன்னூர் அருகே உள்ள மைல்கல் பேருந்து நிறுத்தம் அருகே சரவண சுந்தரம் நின்று கொண்டிருந்தார். அவரை தமிழ்செல்வன் மற்றும் அவரது நண்பரான குரும்பாளையத்தை சேர்ந்த ராஜராஜன்(20) ஆகிய இருவரும் பயங்கர ஆயுதங்களுடன் இருசக்கர வாகனத்தில் வந்து இறங்கினர். ,தனை கண்ட  சரவண சுந்தரம் அவர்களிடம் தப்பி ஓட முயற்சித்தார். ஆனால், அவரை ஓட ஓட விரட்டி தமிழ்செல்வனும், ராஜராஜனும் வெட்டினர். இதில், நிலைகுலைந்த சரணசுந்தரம் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சரண சுந்தரத்தை மீட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு  செய்து விசாரணை மேற்கொண்டனர். சரவண சுந்தரத்தை வெட்டிக்கொலை செய்த வழக்கில் தமிழ்செல்வன், ராஜராஜன் ஆகிய இருவரும் அன்னூர் போலீசில் சரணடைந்தனர். பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவரை  ஓட ஓட விரட்டி கொலை செய்த சம்பவம் அன்னூரில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சரவண சுந்தரம் சமீபத்தில் இந்து முன்னணி அமைப்பில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்து இருப்பதும், தமிழ்செல்வனும்,ராஜராஜனும் தற்போது இந்து முன்னணி அமைப்பில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

click me!