50 லட்சத்தை ஆட்டையை போட்டு 10 கள்ளக்காதலிகளுடன் உல்லாசம்... கண் பார்வையற்றவரின் கன்னாபின்னா விளையாட்டு..!

By vinoth kumarFirst Published Jan 8, 2020, 6:17 PM IST
Highlights

சேலம் அம்மாப்பேட்டையை சேர்ந்தவர் அஸ்ரப் அலி (24). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் வேலை தேடி வந்தார். பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு நேர்முக தேர்வுக்கு சென்று விட்டு பேருந்தில் வீட்டிற்கு திரும்பினார். அப்போது சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்த கண் பார்வையற்ற மாற்று திறனாளியான டேவிட் (38) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

வேலை வாங்கி தருவதாக 50-க்கும் மேற்பட்டோரிடம் ஏமாற்றிய பணத்தை கள்ளக்காதலிகளுடன் உல்லாசம் இருந்த மாற்றுத்திறனாளியை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். 

சேலம் அம்மாப்பேட்டையை சேர்ந்தவர் அஸ்ரப் அலி (24). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் வேலை தேடி வந்தார். பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு நேர்முக தேர்வுக்கு சென்று விட்டு பேருந்தில் வீட்டிற்கு திரும்பினார். அப்போது சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்த கண் பார்வையற்ற மாற்று திறனாளியான டேவிட் (38) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அஸ்ரப் அலியின் செல்போன் எண்களை வாங்கிய டேவிட், அஷ்ரப் அலியிடம் அடிக்கடி பேசி வந்தார். அப்போது ஆஸ்திரேலியாவில் உள்ள ரெனால்ட் நிசான் கம்பெனியில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினார்.

 அதனை நம்பிய அஸ்ரப் அலி 4.25 லட்சத்தை டேவிட்டிடம் கொடுத்தார். பணத்தை வாங்கிய டேவிட் கூறிய படி வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதையடுத்து அஸ்ரப் அலி பணத்தை திருப்பி கேட்டார். ஆனால், பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. பல முறை திருப்பி கேட்டும் பணத்தை கொடுக்காததால் அஸ்ரப் அலி சூரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் டேவிட்டை கடந்த 6-ம் தேதி கைது செய்தனர்.

 பின்னர் டேவிட்டிடம் நடத்திய பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதில், கண் பார்வையிழந்த டேவிட் பேருந்துகளில் அதிக அளவில் பயணம் செய்வார். அப்போது அருகில் இருக்கும் பயணிகளிடம் நைசாக பேச்சு கொடுப்பார். கண் பார்வையற்றவர் என்பதால் பயணிகளும் அவருக்கு உதவி செய்வார்கள். அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் டேவிட் அவர்களது செல்போன் எண்களை பெற்றுக்கொள்வார். பின்னர் வீட்டிற்கு சென்றதும் அவர்களை தொடர்பு கொண்டு இனிக்க, இனிக்க பேசி பழக்கத்தை ஏற்படுத்தி கொள்வார். அப்போது தனக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உயர் அதிகாரிகள் பழக்கம் இருப்பதாகவும், அவர்கள் வேலை வாங்கி கொடுக்க தயாராக உள்ளதாகவும் கூறுவார்.

இதனை நம்பி பணம் கொடுப்பவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு வேலை வாங்கி கொடுக்காமல் 50-க்கும் மேற்பட்டோரிடம் 50 லட்சத்திற்கும் அதிகமாக பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. மேலும், பல பண்களை ஏமாற்றி திருமணம் செய்ததும். மோசடியில் ஈடுபட்ட பணத்தை வைத்து 10-க்கும் மேற்பட்ட கள்ளக்காதலிகளை வைத்து மோசடி பணத்தை அவர்களுக்கு கொடுத்து உல்லாசம் அனுபவித்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை சேலம் சிறையில் அடைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!