ரூ 5 கோடியை மட்டுமா..? என் பொண்டாட்டியையே ஆட்டைய போட்டுட்டான்... கள்ளக்காதலன் எஸ்.ஐ.யை போட்டோ எடுத்து பகீர்..!

Published : Jan 08, 2020, 04:04 PM IST
ரூ 5 கோடியை மட்டுமா..? என் பொண்டாட்டியையே ஆட்டைய போட்டுட்டான்... கள்ளக்காதலன் எஸ்.ஐ.யை போட்டோ எடுத்து பகீர்..!

சுருக்கம்

ரூ.5 கோடி ரூபாய் சொத்துகளை அபகரித்து விட்டுகாவல் உதவி ஆய்வாளருடன் கள்ளக்காதல் உறவு வைத்துக் கொண்டதாக தனது மனைவி மீது வெளிநாடுவாழ் இந்தியர் பகீர் புகாரை தெரிவித்துள்ளார். 

மனைவியுடனான தவறான உறவை தட்டிக் கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாக உதவி ஆய்வாளர் மீதும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில்  சென்னை கே.கே. நகரை சேர்ந்த ஜனார்த்தனன் புகாரளித்துள்ளார். ஜனார்த்தனன், நர்மதா தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சவூதி அரேபியாவில் பணிபுரியும் ஜனார்த்தனன் வெளிநாடு வாழ் இந்தியர். கடந்த ஆண்டு மே மாதம் சவூதி அரேபியாவில் இருந்து ஜனார்த்தனன் சென்னை திரும்பினார். இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் வந்த ஜனார்த்தனன், தனது மனைவி நர்மதா, திருநின்றவூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராஜேஷ் ஆகியோர் மீது புகார் அளித்தார்.

அந்த புகாரில், நர்மதாவுக்கும் திருநின்றவூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராஜேஷ் என்பவருக்கும், தவறான உறவு இருப்பதாகவும், அதை தட்டிக் கேட்டபோது காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஜனார்த்தனன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நர்மதாவும், உதவி ஆய்வாளர் ராஜேஸும் தனிமையில் சந்தித்தபோது அவர்களை பின் தொடர்ந்து புகைப்படம் எடுத்ததாகவும், இதனை பார்த்த உதவி ஆய்வாளர் ராஜேஷ் தன்னை மிகக் கடுமையாக தாக்கியதாகவும் ஜனார்த்தனன் கூறியுள்ளார். தனது குழந்தைகள் பெயரில் வாங்கிய 5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை உதவி ஆய்வாளருடன் சேர்ந்து நர்மதா அபகரித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

காவல்துறை எஸ்.ஐ மீதே கள்ளக்காதல் குற்றச்சாட்டு புகார் கொடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

PREV
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி