பாஜக பிரமுகரை குத்திக்கொன்ற மிட்டாய் பாபு..! சென்னையில் அதிரடி கைது..!

By Manikandan S R SFirst Published Jan 29, 2020, 6:10 PM IST
Highlights

திருச்சி பாஜக பிரமுகரை கொலை செய்த மிட்டாய் பாபு சென்னையில் கைதாகி இருக்கிறார்.

திருச்சி மாவட்டம் பாலகரையைச் சேர்ந்தவர் விஜயரகு. அரசியல் பிரமுகரான இவர் திருச்சி மண்டல பாஜக செயலாளராக இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் காலையில் காந்தி மார்க்கெட் பகுதியில் அவர் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் விஜயரகுவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். திடீரென மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

அதை சற்றும் எதிர்பார்க்காத விஜயரகு, மர்ம கும்பலிடம் இருந்து தப்பி ஓட முயன்றிருக்கிறார். ஆனால் அவரை விடாமல் துரத்திய மர்ம கும்பல் மேலும் பல இடங்களில் வெட்டிவிட்டு தப்பியுள்ளனர். இதில் படுகாயமடைந்த விஜயரகு ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதைக்கண்டு அதிச்சியடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவலர்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த விஜயரகுவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் விஜயரகு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத  பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. செல்போன் திருட்டு தொடர்பான மோதலில் விஜயரகு கொலைசெய்யப்பட்டிருக்க கூடும் என்று காவல்துறையினர் சந்தேகமடைந்தனர். இது சம்பந்தமாக மொபைல் லாட்டரி வியாபாரி முகமது பாபு என்கிற மிட்டாய் பாபு என்பவரை திருச்சி காவலர்கள் தீவிரமாக தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் தற்போது அவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

விஜயரகு கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வந்த தனிப்படையினருக்கு மிட்டாய் பாபு தனது கூட்டாளிகளுடன் சென்னையில் பதுங்கி இருக்கும் தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்னை சென்ற போலீசார் மிட்டாய் பாபுவை அதிரடியாக கைது செய்தனர். அவருடன் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விஜயரகுவை கொலை செய்ததற்கு முன்விரோதம் காரணமா? அல்லது வேறு ஏதும் காரணங்கள் இருக்கிறதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: அடுத்தடுத்து தூக்கில் பிணமாக தொங்கிய இளம் தம்பதி..! பரிதவிக்கும் ஒன்றரை வயது குழந்தை..!

click me!