டிஎன்பிஎஸ்சி.,யை கலக்கிய சித்தாண்டியின் சித்துவிளையாட்டு..! பித்தலாட்டத்தில் தேர்வானவர்களின் பதவி தப்புமா..?

By Thiraviaraj RMFirst Published Jan 29, 2020, 4:49 PM IST
Highlights

சிவகங்கை மாவட்டம் பெரிய கண்ணனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சித்தாண்டி.இவர் 2013 முதல் 2016ம் ஆண்டு வரை சிவகங்கை ஆயுதப்படையில் போலீசராக பணிபுரிந்து வந்தார்

சிவகங்கை அருகே உள்ள பெரிய கண்ணணூர் கிராமத்தைச் சேர்ந்த போலீஸ் எஸ்.ஐ ஒருவரது குடும்பமே குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று அரசு பணியில் சேர்ந்திருப்பது  தற்போது  அம்பலமாகி இருக்கிறது

.

யார் அந்த போலீஸ்காரர்? சிவகங்கை மாவட்டம் பெரிய கண்ணனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சித்தாண்டி.இவர் 2013 முதல் 2016ம் ஆண்டு வரை சிவகங்கை ஆயுதப்படையில் போலீசராக பணிபுரிந்து வந்தார். 2017ம் ஆண்டு சென்னைக்கு பணி மாறுதலாகி சென்றுயுள்ளார். அதன் பிறகு டிஎன்பிஎஸ்சி யில் முக்கிய ஆட்களுடன் தொடர்பு ஏற்பட்டது.  அதை வைத்து முதலில் தனது மனைவி பிரியா,தம்பி வேல்முருகன் மற்றம் அவரது உறவினர்களுக்கு குரூப்2 குரூப்4 குரூப்1 தேர்வுகளில் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு வினாத்தாள்களை கொடுத்திருப்பதும் தற்போது தெரிய வந்திருக்கின்றது. சித்தாண்டி அப்பா காட்டுராஜா,அம்மா சொர்ணவள்ளி ஆகியோர் கடந்த ஒருவாரமாக ஊரில் இல்லை.இவர்  டிஎன்பிஎஸ்சி மூலமாக அரசு வேலை பெற்றவர்கள் வேலைக்கு தற்போது ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.


 

click me!