அதிமுக அமைச்சரின் உதவியாளர் அக்கா மகன் வெட்டிப்படுகொலை... புதுக்கோட்டையில் பதற்றம்..!

Published : Oct 15, 2019, 11:28 AM IST
அதிமுக அமைச்சரின் உதவியாளர் அக்கா மகன் வெட்டிப்படுகொலை... புதுக்கோட்டையில் பதற்றம்..!

சுருக்கம்

புதுக்கோட்டை அடப்பன்வயல் 3-ம் வீதியை சேர்ந்தவர் ராஜரத்தினம். இவரது மகன் வினோத் சக்கரவர்த்தி (35). இவர் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் அன்பானந்த்தின் அக்கா மகன் ஆவர். நேற்று இரவு தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வினோத் சக்கரவர்த்தியை கொடூரமாக வெட்டியது. இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். 

புதுக்கோட்டையில் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் அன்பானந்த்தின் அக்கா மகன் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

புதுக்கோட்டை அடப்பன்வயல் 3-ம் வீதியை சேர்ந்தவர் ராஜரத்தினம். இவரது மகன் வினோத் சக்கரவர்த்தி (35). இவர் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் அன்பானந்த்தின் அக்கா மகன் ஆவர். நேற்று இரவு தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வினோத் சக்கரவர்த்தியை கொடூரமாக வெட்டியது. இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். 

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம், பக்கத்தினர் இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வினோத் சக்கரவர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய கொலையாளிகள் உள்ளூரை சேர்ந்த நபர்களா? அல்லது வெளியூரை சேர்ந்த நபர்களா? முன் விரோதம் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

கதறிய 9ம் வகுப்பு பள்ளி மாணவன்.. ஓயாமல் 4 பேர் டார்ச்சர்.. கட்டாய ஓரின**சேர்க்கையால் அதிர்ச்சி!
பல்கலைக்கழகத்தில் சரமாரி துப்பாக்கிச்சூடு.. 2 மாணவர்கள் பலி.. 8 பேர் படுகாயம்.. பரபரப்பு!