கேரள காதல் ஜோடி லாட்ஜில் ரூம் போட்டு உல்லாசம்... அதற்கு பின் எடுத்த விபரீத முடிவு!! படிக்கவந்த இடத்தில் நடந்த பயங்கர சம்பவம்!!

Published : Oct 15, 2019, 11:15 AM ISTUpdated : Oct 15, 2019, 11:24 AM IST
கேரள காதல் ஜோடி லாட்ஜில் ரூம் போட்டு உல்லாசம்... அதற்கு பின் எடுத்த விபரீத முடிவு!! படிக்கவந்த இடத்தில் நடந்த பயங்கர சம்பவம்!!

சுருக்கம்

கேரளா காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

கேரளா காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

கேரள மாநிலத்தை சேர்ந்த விஷ்ணு என்ற 22 வயது இளைஞர் கர்நாடகா மாநிலத்தில் மங்களூரு பகுதியில் தனியார் கல்லூரியில் தங்கி படித்து வந்தார். இதே போல் கேரளாவிலிருந்து வந்த கரிஷ்மா என்ற 21 வயது இளம்பெண் மற்றொரு கல்லூரியில் தங்கி படித்து வந்துள்ளார். அப்போது இருவரும் நண்பர்களாக ஆரம்பத்தில் பழகி வந்துள்ளனர்.நாளடைவில் இந்த நட்பு நாளடைவில் இருவருக்குமிடையே காதலால், நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கமானது பின்பு  பல்வேறு இடங்களில் சுற்றி வந்துள்ளனர், வீட்டிற்கு செல்வதா சொல்லிவிட்டு இரவு நேரங்களில்  வெளியில் ரூம் எடுத்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இவர்கள் அடிக்கடி ஹாஸ்டலை விட்டு வெளியில் தங்கிய விஷயம் இவர்களுடைய பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களுடைய காதலுக்கு இரண்டு வீட்டிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் காதல் ஜோடி விரக்தியில் ஆழ்ந்தனர். மேலும் இருவராலும் ஒன்றாக இணைந்து தான் வாழ முடியவில்லை, ஆனால் ஒன்றாக சாகலாம் என விபரீதமான முடிவை எடுத்துள்ளனர். இதனால் மங்களூரு ரயில்வே நிலையத்திற்கு அருகேயுள்ள ஒரு ஓட்டலில் இருவரும் ரூம் எடுத்து தங்கியுள்ளனர். பின்பு இருவரும் ஓட்டலில் உல்லாசமாக இருந்துள்ளனர். 

இதனையடுத்து தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இச்சம்பவம் அறிந்த ஹோட்டல் பணியாளர்கள் அவர்களை அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 3 நாட்களாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

PREV
click me!

Recommended Stories

கணவர் கண் முன்னே கதறிய பெண்.. விடாமல் கூட்டாக சேர்ந்து குதறிய சிறுவர்கள் உட்பட 3 பேர்
சிதறி கிடந்த பூ.. கர்சீப்.. தாயின் கதையை முடித்துவிட்டு ஓவர் ஆக்டிங்கால் வசமாக சிக்கிய மகள், மருமகள்.. நடந்தது என்ன?