அமைச்சரின் தீவிர ஆதரவாளர் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை.. பதற்றம்.. போலீஸ் குவிப்பு..!

Published : Mar 27, 2023, 07:42 AM ISTUpdated : Mar 27, 2023, 07:43 AM IST
அமைச்சரின் தீவிர ஆதரவாளர் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை.. பதற்றம்.. போலீஸ் குவிப்பு..!

சுருக்கம்

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகே உள்ள கணுவாபெட்டை வன்னியர் வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளரான இவர் மங்கலம் தொகுதி பொறுப்பாளராக இருந்து வந்தார். 

புதுச்சேரியில் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் பாஜக பிரமுகர் கொடூர கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பதற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகே உள்ள கணுவாபெட்டை வன்னியர் வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளரான இவர் மங்கலம் தொகுதி பொறுப்பாளராக இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று இரவு பேக்கரி கடையில் நின்று பேசிக்கொண்டிருந்த போது மூன்று இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் செந்தில்குமார் மீது வெடிகுண்டை வீசியுள்ளனர்.

இதில், நிலைகுலைந்து போன அவரை அந்த கும்பல் கத்தி மற்றும் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து, அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. இந்த சம்பவம் தொடர்பாக வில்லியனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் செந்தில் குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த கொலை தொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர். பேக்கரியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து  குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அமைச்சரின் ஆதரவாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சினிமா மிஞ்சும் திகில்.. காட்டிக்கொடுத்த காலி மதுபாட்டில்கள் பார் கோடுகள்.. பெண் கொலை வழக்கில் ஓய்வு பெற்ற காவலர் கைது
அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!