கள்ளக்காதல் விவகாரம்; கணவனை கழுத்தறுத்த காதல் மனைவி கைது

By Velmurugan s  |  First Published Mar 24, 2023, 3:40 PM IST

செஞ்சி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் கணவன் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சி செய்த காதல் மனைவி மற்றும் கள்ளக்காதலனை கைது செய்த காதல் கணவனை கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஜம்போதி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 27). இவரும் அதே கிராமத்தை சேர்ந்த சசிகலா (24) என்பவரும் 8 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். சத்யராஜ் சென்னையில் தங்கி கேட்டரிங் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் செஞ்சி அடுத்த மொடையூர் சங்கராபரணி ஆற்று பாலத்தின் அடியில் சத்யராஜ் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் செஞ்சி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செஞ்சி காவல் துறையினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சத்யராஜை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செஞ்சி அரசு மருத்துவமனையில் சத்யராஜுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அனுப்பி வைக்கப்பட்டார்.

Tap to resize

Latest Videos

undefined

பாலியல் பாதிரியார் பெனடிக்கு பாதுகாப்பில்லை; குமரியில் இருந்து பாளை சிறைக்கு மாற்றம்

செஞ்சி காவல் துறையினரின் விசாரணையின் போது சத்யராஜ் பேச முடியாத நிலையிலும் பேப்பரில் தன்னுடைய மனைவி மற்றும் ஜம்போதி கிராமத்தை சேர்ந்த அவருடைய கள்ளக்காதலன் ஜான்(25) ஆகியோர் பெயரை எழுதிக் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து ஒன்றும் தெரியாதது போல் மருத்துவமனைக்கு வந்த காதல் மனைவியை காவல் துறையினர் மருத்துவமனையிலேயே வைத்து கைது செய்து விசாரித்தனர். மேலும் தப்பி ஓடிய கள்ளக்காதலன் ஜானை கைது செய்ய தீவிரம் காட்டிய நிலையில் அவருடைய செல்போன் எண்ணை வைத்து திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் அரசு பேருந்தில் ஓசூர் பகுதிக்கு சென்று கொண்டிருந்த ஜானை மடக்கி கைது செய்தனர்.

காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் 8 வருடங்களாக சத்யராஜை காதலித்து வந்த சசிகலா அதே கிராமத்தைச் சேர்ந்த ஜான் என்பவரையும் 3 வருடங்களாக காதலித்து வந்ததாகவும் சத்யராஜை திருமணம் செய்தாலும் ஜானுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்துள்ளார். சத்யராஜ் சென்னையில் தங்கி கேட்டரிங் வேலை செய்து வந்துள்ளார். ஜான் ஓசூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் அடிக்கடி ஜம்போதி கிராமத்திற்கு வந்து செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். 

ஓசூர் அருகே முன் விரோதம் காரணமாக நண்பர்களுக்குள் மோதல்; ஒருவர் கொலை

இந்நிலையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் சத்யராஜ் கொலை செய்ய அவருடைய காதல் மனைவி சசிகலா மற்றும் கள்ளக்காதலன் ஜான் ஆகியோர் திட்டமிட்டு சத்யராஜை தீர்த்து கட்ட முடிவு செய்தனர். அதன்படி சென்னையில் இருந்த சத்யராஜை ஊருக்கு வரும்படி சசிகலா அழைத்துள்ளார். இதனை அடுத்து நேற்று மாலை சென்னையில் இருந்து நாட்டார்மங்கலம் பகுதிக்கு வந்த சத்யராஜை அவருடைய மனைவி சசிகலா இருசக்கர வாகனத்தில் ஜம்போதி கிராமத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.

அப்போது வழியில் மொடையூர் ஆற்றுப்பாலம் அருகே செல்கையில் தன்னுடைய கணவரிடம் சசிகலா சண்டை போடுவது போல் நடித்து கோபித்துக் கொண்டு ஆற்றுப் பாலத்தின் அடியில் சென்றுள்ளார். உடனே மனைவியை சமாதானப்படுத்த சென்ற சத்யராஜ் அங்கு கள்ளக்காதலன் ஜான் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் சசிகலா தன்னுடைய கணவர் சத்யராஜை பிடித்துக் கொள்ள ஜான் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சத்யராஜின் கழுத்துப் பகுதியில் வெட்டியதில் சத்யராஜ் அங்கேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார். சத்யராஜ் இறந்துவிட்டதாக நினைத்து இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றது தெரியவந்தது.

click me!