கொலை நகரமாகும் தூங்கா நகரம்; மதுரையில் செல்போனுக்காக வடமாநில தொழிலாளி படுகொலை

By Velmurugan sFirst Published Nov 29, 2023, 3:55 PM IST
Highlights

மதுரை தோப்பூர் பகுதியில் செல்போனுக்காக வடமாநில தொழிலாளி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனை அலுவலகம் அருகே சாலையோரம் நடந்து சென்ற வட மாநில தொழிலாளரை கத்தியால் குத்தி கொலை செய்து செல்போனை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் செல்போன் பறிப்பில் நடந்த தகராறில் மற்றொரு தொழிலாளி பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் .சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆஸ்டின்பட்டி நெஞ்சக மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் 20க்கும் மேற்பட்ட வடமாநில கட்டிட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வரும் பீகார்  மாநிலம் சுபேல் மாவட்டத்தைச் சேர்ந்த சுபாஷ்குமார் (வயது 18), சன்னி 21 இருவரும்  இரவு உணவு சமைப்பதற்காக அருகில் உள்ள கூத்தியார் குண்டு விலக்கில் உள்ள மளிகை கடையில் பொருட்களை வாங்கிக் கொண்டு சாலையில் நடந்து சென்றுள்ளனர். 

கோவிலில் சொம்பு திருடியதாக முதியவர் அடித்து கொலை; கிராம மக்கள் வெறிச்செயல் - கிருஷ்ணகிரியில் பரபரப்பு

அவர்கள் எய்ம்ஸ் அலுவலகம் அருகே வந்தபோது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மூன்று பேர் வடமாநில தொழிலாளிகள் இருவரையும் வழிமறித்து செல்போனை பறித்து சென்றுள்ளனர். சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த இருவரும் செல்போன் பறித்துச் சென்றவர்களை துரத்தி பிடித்து சண்டையிட்டுள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் முற்றிய நிலையில் மர்ம நபர்கள் திடீரென கத்தியை எடுத்து இருவரையும் இடது பக்க மார்பில் குத்திவிட்டு அவர்களிடமிருந்த செல்போனை பறித்துச் சென்றுள்ளனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

கத்திக்குத்து பட்ட வடமாநில தொழிலாளி சுபேஷ்குமார் பரிதாபமாக துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு நபரான சன்னி பலத்த  காயத்துடன் மயங்கிய நிலையில் கிடந்தார். அவ்வழியாக வந்தவர்கள் இருவர் கீழே கிடப்பதை பார்த்து உடனடியாக  போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த ஆஸ்டின்பட்டி போலீசார் காயமடைந்த சன்னியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்துவிட்டதாகக் கூறி மயானத்திற்கு தூக்கிச்செல்லப்பட்ட இளைஞர் திடீரென கண் விழித்ததால் பரபரப்பு

அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சுனில் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தொடர்ந்து சம்பவம் குறித்து விசாரணை செய்த போலீசார் ஆதாயக் கொலை என வழக்கு பதிவு செய்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த மதுரை சரக டி ஐ ஜி ரம்யா பாரதி, மாவட்ட எஸ்பி சிவப்பிரசாத் விசாரணை மேற்கொண்டு தப்பி ஓடிய குற்றவாளிகளை விரைந்து பிடிக்க போலீஸாருக்கு உத்தரவிட்டனர். 

வடமாநில தொழிலாளியை கொலை செய்து செல்போனை பறித்துச் சென்ற சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!