மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மாறி மாறி மிருகத்தனமாக வேட்டையாடிய தந்தை, மகன்.. இருவரும் குண்டர் சட்டத்தில் கைது

Published : Jun 24, 2020, 04:29 PM IST
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மாறி மாறி மிருகத்தனமாக வேட்டையாடிய தந்தை, மகன்.. இருவரும் குண்டர் சட்டத்தில் கைது

சுருக்கம்

அரியலூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தந்தையும், மகனும் மாறி மாறி பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இருவரையும் போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள ஸ்ரீபுரந்தான் கிராமத்தைச் சேர்ந்த குமாரும் (45), அவரது மகன் காளிதாஸ் என்ற கார்த்திக்கும் (22) அப்பகுதியில் உள்ள மனவளர்ச்சி குன்றிய 32 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணை இருவரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால், அப்பெண்ணுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.  

இதனையடுத்து, அப்பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். பின்னர், பெண்ணின் சகோதரன் கொடுத்த புகாரின் பேரில், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து  குமார் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரையும் கடந்த 11-ம் தேதி கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், தந்தை, மகன் இருவரையும் திருச்சி மண்டல டிஐஜி பாலகிருஷ்ணன் மற்றும் அரியலூர் எஸ்.பி. ஆர்.ஸ்ரீனிவாசன் பரிந்துரையின் பேரில், அரியலூர் ஆட்சியர் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க உத்தரவிட்டார். 

PREV
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!