முன்னாள் காதலியை புதிய காதலனுடன் பார்த்த துறவி... ஆத்திரம் அடங்காமல் கர்ப்பிணியை வெட்டிச் சாய்த்து அதிர்ச்சி.!

Published : Jun 20, 2020, 01:39 PM IST
முன்னாள் காதலியை புதிய காதலனுடன் பார்த்த துறவி... ஆத்திரம் அடங்காமல் கர்ப்பிணியை வெட்டிச் சாய்த்து அதிர்ச்சி.!

சுருக்கம்

தனது முன்னாள் காதலி புதிய காதலனுடன் இருப்பதைப்பார்த்து ஆத்திரமடைந்த துறவி ஒருவர், அந்த பெண்ணை பட்டாக்கத்தியால் வெட்டிக் கொலை கொடூரமாக கொலைசெய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

தனது முன்னாள் காதலி புதிய காதலனுடன் இருப்பதைப்பார்த்து ஆத்திரமடைந்த துறவி ஒருவர், அந்த பெண்ணை பட்டாக்கத்தியால் வெட்டிக் கொலை கொடூரமாக கொலைசெய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தாய்லாந்தை சேர்ந்த 57 வயது புத்த மதத் துறவி உம் தீரென்ராம். துறவியாவதற்கு முன் லம்பாய் புவலோய என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். புத்த துறவியானதும் அவர் தனது காதலியை பிரிந்து விட்டார். இந்நிலையில் தீரென்ராம் தனது முன்னாள் காதலியான 33 வயது லம்பாய் புவலோயை புதிய காதலனுடன் அவரது வீட்டுக்கு முன் காரில் அமர்ந்திருப்பதை பார்த்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் தனது வேனை அவர்கள் கார் மீது தீரென்ராம் மோதியுள்ளார். புதிய காதலன் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார்.

உடனே தீரென்ராம் தன் காரிலிருந்த பட்டாக்கத்தியை எடுத்து வலம்பாயை கொடூரமாக வெட்டி சாய்த்துள்ளார். பின்னர் லம்பாய் வீட்டுக்குச் சென்ற தீரென்ராம், தனது முன்னாள் காதலியை வேறொருவருடன் பார்க்க நேர்ந்ததால் கோபத்தை அடக்க இயலாமல் அவளைக் கொன்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.

போலீசார் சம்பவ இடத்திலேயே தீரென்ராமை கைது செய்தனர். இதுகுறித்து தீரென்ராமின் சகோதரர் கூறுகையில், ‘’தனது சகோதரர் புத்த துறவியாகும் முன் லம்பாயை காதலித்தார். புத்த துறவியானதும் அவரைப் பிரிந்துவிட்டார். லம்பாய் அடிக்கடி அவரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தார்.லம்பாயின் வயிற்றில் தீரென்ராமின் குழந்தை வளர்வதால், அதைக் குறித்து வெளியே சொல்லப்போவதாகவும், அதை வெளியில் சொன்னால்  புத்த துறவி வாழ்க்கையே நாசமாகிவிடும் என்று மிரட்டினார். 

ஆகவே, தீரென்ராம் ஏற்கனவே கோபத்திலிருந்த நிலையில், லம்பாயை புதிய காதலனுடன் பார்த்தவுடன் ஆத்திரத்தில் அவளைக் கொலை செய்துள்ளார்’’ எனத் தெரிவித்துள்ளார். இறந்த தீரென் ராமின் முன்னாள் காதலி லம்பாய் எட்டு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

சார்.. நான் உங்க ஸ்டூடண்ட்ஸ்.! இப்படியெல்லாம் பண்ணாதீங்க! எவ்வளவு சொல்லியும் கேட்காத ஆசிரியருக்கு செருப்பு மாலை
கதறிய தங்கை.. பதறிய அக்கா கவிப்பிரியா.. ரத்த வெள்ளத்தில் பிரசாத் அலறல்.. நடந்தது என்ன?