மருத்துவ சீட் வாங்கி தருவதாக மோசடி... சூப்பர் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்...!

By Kevin KaarkiFirst Published May 26, 2022, 11:17 AM IST
Highlights

பணத்தை பெற்றுக் கொண்ட கயவர்கள், அதன் தங்களது மொபைல் போனை ஸ்விட்ச் ஆப் செய்து தலைமறைவாகி விட்டனர்.

பெங்களூரில் உள்ள கெம்பகவுடா மருத்துவ கல்லூரியில் மருத்துவ சீட் வாங்கி தருவதாக கூறி நபரிடம் இருந்து ரூ. 10 லட்சத்து 16 ஆயிரத்தை ஏமாற்றி பறித்த அசோக் ஷா என்ற நபரை ஐதராபாத் சைபர் கிரைம் போலீஸ், டிடெக்டிவ் துறை சேர்ந்த கைது செய்து உள்ளனர். கைது செய்யப்பட்டு உள்ள அசோக் ஷா பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.

பீகார் மாநிலத்தின் சௌபால் மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட 30 வயதான அசோக் ஷா ஐதராபாத் கொண்டுவரப்பட்டு இருக்கிறார். பணத்தை கொடுத்து ஏமாந்ததை அடுத்து போலீஸ் உதவியை நாடியவர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து எழுதி இருக்கிறார். 

“கவுன்சலிங்கிற்காக காத்திருந்த நிலையில், ஏமாற்றப்பட்ட பெண்ணுக்கு கெம்பகவுடா மருத்துவ கல்லூரியில் இடம் வழங்குவதாக கூறி குறுந்தகவல் வந்துள்ளது. இதை அடுத்து பாதிக்கப்பட்ட பெண் ரூ. 10 லட்சத்து 16 ஆயிரத்தை கொடுத்து இருக்கிறார். பணத்தை பெற்றுக் கொண்ட கயவர்கள், அதன் தங்களது மொபைல் போனை ஸ்விட்ச் ஆப் செய்து தலைமறைவாகி விட்டனர்,” என போலீஸ் இணை ஆணையர் கஜராவ் புபல் தெரிவித்து இருக்கிறார். 

சதித்திட்டம்:

இது குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், குற்றவாளிகள் பெங்களூரில் அலுவலகம் அமைத்து நீட் தேர்வு எழுதி கவுன்சலிங்கிற்கு காத்திருக்கும் மாணவர்களின் விவரங்களை சேகரித்து வந்துள்ளனர். பின் மாணவர்களை தேர்வு செய்து அவர்களை தொடர்பு கொண்டு, மருத்துவ சீட் வாங்கி தருவதாக உறுதி அளிக்கின்றனர். இவர்கள் உறுதி அளித்ததை நம்பும் மாணவர்களிடம் அதற்கான கட்டணம் செலுத்த வைக்கின்றனர். 

சந்தேகப்படும் மாணவர்களை பெங்களூரில் அவர்கள் அமைத்து இருக்கும் போலி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று மாணவர்களை நம்ப வைக்கின்றனர். இதன் பின் மாணவர்களிடம் பணத்தை தங்களின் வங்கி கணக்குகளுக்கு அனுப்ப வலியுறுத்துகின்றனர். பணம் கைமாறியதும், குற்றவாளிகள் தங்களின் மொபைல் போனை ஸ்விட்ச் ஆப் செய்து தலைமறைவாகி விடுகின்றனர்.

click me!