
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இறைச்சி கடை உரிமையாளர் சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் கிருஷ்ணமநாயக்கர்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் (28). இவருக்கு திருமணமாகி 4 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பிரசாந்த் தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார். கடந்த பல ஆண்டுகளாக எரிச்சநத்தம் பகுதியில் பன்றி இறைச்சிக்கடை நடத்தி வந்த நிலையில் கடந்த வாரம் முதல் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன்கோவில் குன்னூர் விளக்கு அருகே ஆடு இறைச்சி கடை துவக்கியுள்ளார்.
இதையும் படிங்க: தலைநகரை அலறவிட காத்திருந்த கூலிப்படை கும்பல்! ஒரே நேரத்தில் 3 பேருக்கு ஸ்கெட்ச்! துப்பாக்கி முனையில் கைது!
2வது வாரமாக இன்று ஆட்டு இறைச்சி கடை நடத்துவதற்காக நேற்று இரவு கிருஷ்ணன் கோவிலில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கிவிட்டு இன்று அதிகாலை ஆட்டு இறைச்சி கடையை திறக்க வந்துக்கொண்டிருந்தார். அப்போது பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள தனியார் பார் அருகில் வைத்து மர்ம நபர்கள் பிரசாந்த்தை அரிவாளால் முகம் கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியுள்ளனர்.
இதையும் படிங்க: என் நண்பனே இப்படி செஞ்சா கோவம் வருமா வராதா? அதனால் தான் அட்வகேட்டை ஓட ஒட விரட்டி கொன்றேன்.. குற்றவாளி பகீர்!
இதில் ரத்த வெள்ளத்தில் முகம் சிதைந்த நிலையில் துடிதுடித்து உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வெட்டுக்காயங்களுடன் கிடந்த பிரசாந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததனர். பிரசாந்த் தொழில் போட்டியின் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் அதன் காரணமாக பிரச்சனை ஏற்பட்டு கொலை நடந்துள்ளதா என்ற பல்வேறு கோணங்களில் கிருஷ்ணன் கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.