ஒரே அறையில் இருக்கனும்.. மாசம் மூணு நாள் வெளியில வரனும்.. நேர்காணல் வந்த பெண்ணிடம் சில்மிஷம்.. எம்.டி கைது

Published : Apr 28, 2022, 11:11 AM IST
ஒரே அறையில் இருக்கனும்.. மாசம் மூணு நாள் வெளியில வரனும்.. நேர்காணல் வந்த பெண்ணிடம் சில்மிஷம்.. எம்.டி கைது

சுருக்கம்

சென்னையில் நேர்காணலுக்கு சென்ற இளம்பெண்ணிடம் நிறுவனத்தின் எம்.டி ஆபாசமாக, பேசிய பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, அப்பெண் அளித்த புகாரின் பேரில் அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.    

சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த கணேஷ்பாபு என்பவர் மாதவரம் 200 அடி சாலையில் பெயின்ட் விநியோகம் செய்யும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் பெயிண்ட் நிறுவனத்துக்கு தனிப்பட்ட செயலாளர் வேலைக்கு ஆள் தேவை என்று விளம்பரம் செய்திருக்கிறார் கணேஷ்பாபு . 

அதைப் பார்த்த இளம்பெண் ஒருவர்,  கடந்த 22 ஆம் தேதி காலை 11.30 மணியளவில் நேர் காணலுக்கு சென்றுள்ளார். அவரிடம் கணேஷ்பாபு, இன்டர்வியூ நடத்தி போது, ஆபாசமாக பேசியதோடு மட்டுமல்லாம் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறி  ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொடுத்தாகவும் அந்த பெண் புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த மாதவரம் காவல்நிலைய போலீசார், கணேஷ்பாபுவை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அந்த காமுகனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல் திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது. நேர்காணலுக்கு வந்திருந்த பெண்ணிடம் எனது நிறுவனத்தில் தனிப்பட்ட செயலாளர் வேலைக்குச் சேர்ந்தால் மாதத்தில் மூன்று தடவை வெளியூர்களுக்குச் செல்ல நேரிடும் என்றும் அப்போது தன்னுடன் ஒரே அறையில் தங்க நேரிடும் என்றும் கூறியுள்ளார். அதற்கு நீ ஒப்பு கொண்டால் உனது சம்பளம், வாழ்க்கை தரத்தை உயர்த்தி தருகிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் அந்த பெண் அணிந்து வந்த ஆடை, அலங்காரம் ரொம்ப மோசமாக இருப்பதாகவும் நல்ல உடையாக வாங்கிக் கொள் என்று அந்த பெண்ணிடம் ஆயிரம் ரூபாயை கொடுத்ததாகவும் தெரிகிறது. ஆனால் அதை அந்த பெண் வாங்காமல் அங்கிருந்து வெளியில் வந்துள்ளார். பின்னரே அந்த பெண் அளித்த புகார் அடிப்படையில் கணேஷ்பாபுவை கைது செய்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!