மயிலாடுதுறையில் முன்னாள் வன்னியர் சங்க நிர்வாகி 12 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறையில் முன்னாள் வன்னியர் சங்க நிர்வாகி 12 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் கொத்த தெருவை சேர்ந்தவர் கண்ணன் (31). கூலி தொழிலாளியான இவர் முன்னாள் வன்னியர் சங்க நகர செயலாளராக இருந்தவர். கண்ணனுக்கும், கலைஞர் காலனியை சேர்ந்த கதிரவன் என்பவருக்கும் இடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு இலை எடுப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- இது இருப்பதால்தானே எவளையோ தேடி போற! கொதிக்கும் வெந்நீரை எடுத்து ஆண் உறுப்பில் ஊற்றிய மனைவி!வலியால் அலறிய கணவர்
இதுகுறித்து கதிரவன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து கண்ணன் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சிறையில் இருந்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டார். நேற்று நள்ளிரவு கண்ணன் பீடா வாங்கிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது, பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்த கும்பல் கண்ணனை சரமாரியாக வெட்டியது. இதில், தலை, மார்பு, முகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டு விழுந்ததை அடுத்து சம்பவ இடத்திலேயே கண்ணன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். கொலை செய்த கும்பம் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பியது. இதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க;- ஹோட்டல் ரூமே கதி.. காதலர்களுடன் கும்மாளம் - 550 சவரன் நகையை மாடல் அழகியிடம் பறிகொடுத்த தொழிலதிபர்
பின்னர் அப்பகுதியில் இருந்த சிசிடிவி பதிவான பதிவுகளை கைப்பற்றினர். இதில், 12 பேர் கும்பல் கண்ணனை கொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் வன்னியர் சங்க நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பதற்றம் ஏற்படுத்தியுள்ளதை அடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.