சாத்தான்குளம் சம்பவம்: தேடப்பட்டு வந்த குற்றவாளி போலீஸ் முத்துராஜ் கைது.!!

Published : Jul 03, 2020, 11:09 PM IST
சாத்தான்குளம் சம்பவம்: தேடப்பட்டு வந்த குற்றவாளி போலீஸ் முத்துராஜ் கைது.!!

சுருக்கம்

இந்நிலையில் தற்போது போலீசார் முத்துராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் அரசன்குளத்தில் வைத்து அவரை போலீசார் கைது செய்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கை மீறி, தங்களது செல்போன் கடையை திறந்து வைத்து இருந்ததாக கூறி அவர்களை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றவர்கள் கடுமையாக தாக்கப்பட்டு உயிருக்கு ஊசலாடும் நிலையில் கோவில் பட்டி கிளைச்சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்கள். ஒரிரு நாளிலேயே தந்தையும் மகன் அடுத்தடுத்து மரணம் அடைந்த சம்பவம் உலகத்தையே உலுக்கி எடுத்தது.

 மதுரை ஐகோர்ட் உத்தரவின் படி, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. தந்தை மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

சிபிசிஐடி நடவடிக்கையை தொடர்ந்து காவலர் முத்துராஜ் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்திருக்கிறது. இதையடுத்து, அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  தூத்துக்குடி சிபிசிஜடி அலுவலகத்தில் போலீசார் மகாராஜன் மட்டும் ஆஜரானர். அவரிடம் சிபிசிஜடி போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை நீதிபதியான பாரதிதாசனை காவலர் மகாராஜன் ஒருமையிலும் மிரட்டல் தோனியிலும் நடந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


 இந்நிலையில் தற்போது போலீசார் முத்துராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் அரசன்குளத்தில் வைத்து அவரை போலீசார் கைது செய்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!