சாத்தான்குளம் தந்தை மகன் மரணம்.. ஆட்டத்தை ஆரம்பித்த சிபிசிஐடி போலீஸ்.. எஸ்ஏக்கள் மீது கைது,வழக்கு பதிவு.!!

By T BalamurukanFirst Published Jul 1, 2020, 10:33 PM IST
Highlights

சாத்தான்குளம் மரணம் சம்பவத்தில் சிபிசிஐடி போலீசார் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்த முதல் நாளே சம்மந்தப்பட்ட குற்றவாளிகளான எஸ்ஐக்கள் மீது வழக்கு பதிவு செய்து எஸ்ஐ ரகுகணேஷ் கைது செய்திருக்கிறது இந்த டீம்.


சாத்தான்குளம் மரணம் சம்பவத்தில் சிபிசிஐடி போலீசார் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்த முதல் நாளே சம்மந்தப்பட்ட குற்றவாளிகளான எஸ்ஐக்கள் மீது வழக்கு பதிவு செய்து எஸ்ஐ ரகுகணேஷ் கைது செய்திருக்கிறது இந்த டீம்.
சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இரண்டு பேர் மரணம் அடைந்தது நாடு முழுக்க விமர்சனங்களை சந்தித்து வருகிறது. கடந்த 19ஆம் தேதி போலீசால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கோவில்பட்டி சிறையிலேயே மர்ம மரணம் அடைந்தனர்.

லாக்டவுன் நேரத்தில் கடை வைத்து இருந்ததாக கூறி கைது செய்யப்பட்ட இவர்கள் மோசமாக துன்புறுத்தப்பட்டு இருக்கிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை விசாரித்து வருகிறது.

இந்த வழக்கை இன்றில் இருந்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இன்று கோவில்பட்டி சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்தனர். இந்த நிலையில் சாத்தான்குளம் மரணம் தொடர்பாக சாத்தான்குளம் போலீஸ்காரர்கள் முருகன், முத்துராஜ் உட்பட 6 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.


சிபிசிஐடி போலீசார் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறது.இந்த டீம் 10 குழுக்களாக பிரிந்து சாத்தான்குளம் காவல்நிலையம் கிளை சிறைச்சாலை ஜெயராஜ் பென்னிக்ஸ் வீடு மற்றும் கார் டிரைவல் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். ஜெயராஜ் பென்னிக்ஸ் கொடூரமாக தாக்கப்பட்டு சுமார் 110கிலோமீட்டர் தூரம் வரைக்கும் பென்னிக்ஸ் நண்பர் காரில் அழைத்துச்சென்றிருக்கிறது போலீஸ். அந்த கார் டிரைவர்..' என் காரில் இரண்டு போலீசார் அழைத்து வந்தார்கள்.அவர்களுக்கு என்னுடைய போர்வை தான் கொடுத்தேன். அவர்கள் காரில் வரும் போது வலி இருப்பதாக சொல்லவில்லை. ஆனால் காரில் இருந்து இறங்கிய போது உட்கார்ந்திருந்த போர்வை இரத்தக்கறையுடன் காணப்பட்டது கண்டு அதிர்ந்துபோனேன் என்கிறார். 


பென்னிக்ஸ் நடத்திய செல்போன் கடை அருகில் உள்ளவர்களிடம் விசாரித்தனர்.அப்போது பேசியவர்.." என்னுடைய சிசிடிவி கேமிரா பதிவில் ஒரு போலீஸ்காரர் வந்து பென்னிக்ஸிடம் ஏதோ சொல்லுகிறார். எதிர்புறத்தில் போலீஸ் அதிகாரி யாரோ உள்ளே உட்கார்ந்து இருந்தார் அவரிடம் போய் பென்னிக்ஸ் ரிலாக்ஸாக பேசிவிட்டு தான் வந்தார். சிறிது நேரம் கழித்து போலீஸ் நிலையத்துக்கு போனார். இந்த தகவல் அவரது நண்பர்களுக்கு தெரிந்ததும்.காவல் நிலையம் விரைந்தார்கள். அதன் பிறகு என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது என்கிறார்.


காவல்நிலையத்தில் இருந்த சிசிடிவி லத்தி ரத்தக்கறை படிந்த இடங்களையெல்லாம் சிபிசிஐடி மற்றும் தடயவியல் மற்று கைரேகை நிபுணர் டீம் ஆய்வு செய்திருக்கிறது. பென்னிக்‌ஸ் ஜெயராஜ் ஆகியோர் வீட்டிற்கு சென்ற சிபிசிஐடி டீம் விரிவான விசாரணையை மேற்கொண்டுள்ளது.
மனிதஉரிமை அமைப்புகள் எல்லாம் இதுவரைக்கும் குற்றம்சாட்டப்பட்டுள்ள எஸ்ஐக்கள் மற்றும் போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்படாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்கள்.

அதோடு உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். சாத்தான்குளம் வழக்கில் இது அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் வழக்கில் சாத்தான்குளம் எஸ்ஐ ரகுகணேஷ் சிபிசிஐடி போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 
 

click me!