
சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த பிரியங்கா(32). இவரது கணவர் செல்வந்தர். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு குழந்தைகளுடன் பிரியங்கா தனியாக வாழ்ந்து வந்தனர். இரண்டு ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வந்த பிரியங்கா நெற்குன்றத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவருடன் பிரியங்காவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் கணவன் மனைவி போல் இருவரும் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கள்ளக்காதலர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவ்வப்போது சண்டை போட்டு வந்துள்ளனர். இதனால் பிரியங்கா மீது கோவிந்தராஜ் கடும் ஆத்திரத்தில் இருந்தது மட்டுமல்லாமல் கொலை செய்ய முடிவு செய்தார்.
அதன்படி கோவிந்தராஜ் நைசாக பேசி மணலி பகுதியில் பிரியங்காவை வரவழைத்துள்ளார். அப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்திய போது வாக்குவாதம் ஏற்பட்டு மது பாட்டிலில் உடைத்து பிரியங்காவை கழுத்தை அறுத்துள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து வியாசர்பாடி காவல் நிலையத்தில் கள்ளக்காதலன் கோவிந்தராஜ் சரணடைந்துள்ளார். பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கள்ளக்காதலியை கள்ளக்காதலன் பாட்டிலால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.