போராட்டங்களை ஆதரிக்கிறவர்கள் இதனை ஏற்றுக் கொள்கிறீர்களா? ரூபா ஐபிஎஸ் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..!

Published : Dec 24, 2019, 06:17 PM IST
போராட்டங்களை ஆதரிக்கிறவர்கள் இதனை ஏற்றுக் கொள்கிறீர்களா?  ரூபா ஐபிஎஸ் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..!

சுருக்கம்

போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் தான் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்பதற்கான சிசிடிவி ஆதாரத்தை, போலீசார் வெளியிட்டுள்ளனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கர்நாடகா மாநிலம் மங்களூருவில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. இதையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். பெரும் சர்ச்சைக்குள்ளாகிய இந்த விவகாரத்தில், துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்பதற்கான விளக்கத்தை மங்களூரு போலீசார் அளித்துள்ளனர்

.

வன்முறையில் ஈடுபடுவது தெரியக்கூடாது என்பதற்காக, போராட்டக்காரர்கள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை அடித்து நொறுக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். அதன் பிறகுதான் போலீசார் மீது கல்வீச்சு மற்றும் போலீஸ் வாகனங்கள் எரிப்பு போன்ற சம்பவங்கள் அரங்கேறி உள்ளது. அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில், போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் தான் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்பதற்கான சிசிடிவி ஆதாரத்தை, போலீசார் வெளியிட்டுள்ளனர்.

கர்நாடகாவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகளில் பிரபலமான ரூபா தற்போது அவர் ரயில்வே துறையில் பணியாற்றி வருகிறார். அவரும் போராட்டங்களை ஆதரிக்கிறவர்கள் இந்த வன்முறை சம்பவங்களை ஏற்றுக்கொள்கிறீர்களா? இவர்களை எப்படி பாதுகாப்பது? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 

 


 

PREV
click me!

Recommended Stories

ஒரே போன்கால்..! தேனி பேருந்து நிலையத்தில் குவிந்த போலீஸ்! கையும் களவுமாக சிக்கிய பிரசாத்! நடந்தது என்ன?
புதிய வகை ஆன்லைன் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் முதல் AI வாய்ஸ் வரை - தப்பிப்பது எப்படி?