தலைக்கேறிய கஞ்சா போதை .. பிளேடால் தன்னைத்தானே அறுத்துக்கொண்ட இளைஞர் .. காவல்நிலையத்தில் பரபரப்பு ..

Published : Aug 26, 2019, 06:21 PM ISTUpdated : Aug 26, 2019, 06:24 PM IST
தலைக்கேறிய கஞ்சா போதை .. பிளேடால் தன்னைத்தானே அறுத்துக்கொண்ட இளைஞர் .. காவல்நிலையத்தில் பரபரப்பு ..

சுருக்கம்

சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கஞ்சா போதையில் இளைஞர்  ஒருவர் தன்னைத்தானே அறுத்துக்கொண்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் . இவர் கடந்த பல மாதங்களாக கஞ்சாவிற்கு அடிமையாகி இருப்பதாக கூறப்படுகிறது . எந்த நேரமும் கஞ்சா போதையில் இருக்கும் இவர் , அதன் காரணமாக பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டிருக்கிறார் . இதனால் இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் இருக்கிறது .

இந்த நிலையில் சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கஞ்சா போதையில் சீனிவாசன் நுழைந்திருக்கிறார் . அரை நிர்வாண கோலத்தில் இருந்த அவர் தான் வைத்திருந்த பிளேடால் தனது மார்பு மற்றும் கழுத்து பகுதிகளில்  தன்னைத்  தானே அறுத்து கொண்டிருக்கிறார் . தன்னை காவல்துறையினர் நிம்மதியாக வாழ விடுவதில்லை என்று கூறிக்கொண்டே அறுத்துக்கொண்டார் .

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த காவல் நிலைய அதிகாரிகள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் . இந்த சம்பவத்தில் காவல்துறையினர் அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்திருக்கின்றனர் .

காவல் நிலையத்திலேயே போதையில் ஒருவர் பிளேடால் தன் கழுத்தை அறுத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

சீனாவில் ஆட்சியை கவிழ்க்கும் டிரம்ப்..! உளவு பார்த்த அமெரிக்கா.. அணு ரகசிய ஃபைல்கள் லீக்..!
அதிகாலையிலேயே பதறிய தமிழகம்.. பிரபல ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! யார் இந்த கொட்டு ராஜா?