'அவ இல்லாம வாழ முடியல'..! மனைவி இறந்த துக்கத்தில் மகன்களை கொன்று தந்தை எடுத்த கோர முடிவு..!

By Manikandan S R S  |  First Published Mar 3, 2020, 12:39 PM IST

மனைவி இல்லாத உலகத்தில் வாழ விரும்பாத சுந்தர் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். தானும் இறந்து விட்ட பிறகு மகன்கள் அனாதையாகிவிட கூடாது என நினைத்த சுந்தர் அவர்களை கொலை செய்துவிட்டு தான் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். அதன்படி நேற்று இரவு வாழை பழத்தில் குருணை மருந்தை கலந்து மகன்களுக்கு கொடுத்து தானும் உண்டார். 


மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே இருக்கிறது அரியூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் சுந்தர்(42). இவரது மனைவி இந்துமதி (35). இந்த தம்பதியினருக்கு சுனில் (13), விமல் (9) என்ற 2 மகன்களும் இருந்தனர். சுந்தர் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். அவரது மகன்கள் இருவரும் அப்பகுதியில் இருக்கும் ஒரு பள்ளியில் படித்து வந்தனர். இந்துமதிக்கு கடந்த சில வருடங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துள்ளனர். எனினும் சில மாதங்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

Tap to resize

Latest Videos

undefined

அவரது மறைவு சுந்தர் மற்றும் அவரது மகன்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இருந்தாலும் மகன்களுக்காக மனதை கல்லாகி கொண்டு சுந்தர் வாழ்க்கை நடத்தினார். ஆனாலும் மனைவியின் பிரிவால் தொடர்ந்து விரக்தியுடன் காணப்பட்டார். இந்தநிலையில் மனைவி இல்லாத உலகத்தில் வாழ விரும்பாத சுந்தர் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். தானும் இறந்து விட்ட பிறகு மகன்கள் அனாதையாகிவிட கூடாது என நினைத்த சுந்தர் அவர்களை கொலை செய்துவிட்டு தான் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். அதன்படி நேற்று இரவு வாழை பழத்தில் குருணை மருந்தை கலந்து மகன்களுக்கு கொடுத்து தானும் உண்டார். சிறிது நேரத்தில் சுந்தர், மகன்கள் சுனில், விமல் ஆகியோர் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.

190 கி.மீ...! 1 மணி 50 நிமிடங்கள்..! நோயாளியை காப்பாற்ற உயிரை பணயம் வைத்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்..!

காலை வெகுநேரமாக கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை தட்டி பார்த்தனர். எந்த சத்தமும் வராததால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த காவலர்கள் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு சுந்தர் மகன்களுடன் பிணமாக கிடந்தார். இதையடுத்து மூவரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது. மனைவி இறந்த துக்கத்தில் மகன்களுடன் சுந்தர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

'போகாதீங்க மோடிஜி'..! சமூக வலைதளங்களில் பாசத்தை தெறிக்கவிடும் இந்தியர்கள்..!

click me!