அண்ணியுடன் ஜல்சாவுக்காக ஏக்கத்தில் தவித்த கொழுந்தன்... உல்லாசத்திற்கு வரமறுத்த மின்னலுக்கு நடந்த கொடூரம்..!

Published : Mar 03, 2020, 11:52 AM IST
அண்ணியுடன் ஜல்சாவுக்காக ஏக்கத்தில் தவித்த கொழுந்தன்... உல்லாசத்திற்கு வரமறுத்த மின்னலுக்கு நடந்த கொடூரம்..!

சுருக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் ஜம்னாமரத்தூர் அடுத்த கீழ்விளாமூச்சி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை (45). இவரது மனைவி மின்னல்கொடி (40). தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அண்ணாமலை சென்னையில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். நேரம் கிடைக்கும் போது ஊருக்கு வந்து செல்வார். குழந்தைகளும் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இதனால் மின்னல்கொடி (40) வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

திருவண்ணாமலையில் உல்லாசத்திற்கு வர மறுத்த அண்ணியை கொழுந்தன் கல்லை கட்டி கிணற்றில் தள்ளி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டம் ஜம்னாமரத்தூர் அடுத்த கீழ்விளாமூச்சி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை (45). இவரது மனைவி மின்னல்கொடி (40). தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அண்ணாமலை சென்னையில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். நேரம் கிடைக்கும் போது ஊருக்கு வந்து செல்வார். குழந்தைகளும் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இதனால் மின்னல்கொடி (40) வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 27-ம் தேதி அப்பகுதியில் உள்ள கிணற்றில் மின்னல்கொடி பிணமாக மிதந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மின்னல்கொடி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த அறிக்கையில் மின்னல்கொடி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், அண்ணாமலையின் தம்பி சவுந்தரராஜன் (30) என்பவருக்கும் மின்னல்கொடிக்கும் நீண்ட நாட்களாக கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. மின்னல்கொடி எப்போதும் தனிமையில் இருப்பதால் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் நாளடைவில் சவுந்தரராஜன் மனைவிக்கு தெரிவந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த சவுந்திரராஜனின் மனைவி, கணவருடனான தொடர்பை துண்டித்துக் கொள்ளும்படி மின்னல்கொடியை தகாத வார்த்தையால் திட்டி எச்சரித்தார். இதனால் அவமானம் அடைந்த மின்னல்கொடி கடந்த 6 மாதங்களாக கொழுந்தனுடனான கள்ளத்தொடர்வை துண்டித்துள்ளார். 

இதனால், வேதனையில் இருந்த சவுந்தரராஜன், அடிக்கடி அண்ணி மின்னல்கொடியை சந்தித்து உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். ஆனால், மின்னல்கொடி மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சவுந்திரராஜன் தனியாக அந்த வழியாக வந்த மின்னல்கொடியை மடக்கி தனது ஆசைக்கு இணங்குமாறு அழைத்தார். அதற்கு அவர் மீண்டும் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த சவுந்தரராஜன் மின்னல்கொடியின் முதுகில் கல்லை கட்டி கிணற்றில் தள்ளி கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, சவுந்திரராஜன் கைது செய்த போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

PREV
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி