சிவகங்கை அருகே போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.!

Published : Mar 02, 2020, 05:02 PM ISTUpdated : Mar 02, 2020, 05:07 PM IST
சிவகங்கை அருகே  போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.!

சுருக்கம்

யோகேஸ்வரன் துப்பாக்கியால் தன்னைதானே சுட்டுக்கொண்ட சம்பவத்தை போலீசார் மறைத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

T>Balamurukan

யோகேஸ்வரன் துப்பாக்கியால் தன்னைதானே சுட்டுக்கொண்ட சம்பவத்தை போலீசார் மறைத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையம் அருகில் இந்தியன் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் இருந்து அப்பகுதியை சுற்றியுள்ள கிளை வங்கிகளுக்கு பணம் அனுப்பப்பட்டு வருகிறது, இங்கு பணம் வைத்துள்ள லாக்கரை பாதுகாக்க ஆயுதப்படை காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர், நேற்று பணியில் இருந்த மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த  ஆயுதப்படை காவலர் யோகேஸ்வரன் என்பவர் பணியில் இருந்துள்ளார் . காலை 9 மணி அளவில் மற்ற வங்கிக்கு பணம் எடுப்பதற்காக பெண் காவலர்கள் இருவர் வந்துள்ளனர். ஆனால் அறை உள்ளே பூட்டி இருப்பதைக்கண்டு அதிர்ந்த காவலர்கள் வங்கி மேலாளரிடம் தெரிவித்துள்ளார்கள். உடனடியாக வங்கி மேலாளர் தன்னிடமிருந்த மற்றுமொரு சாவி மூலம் கதவைத் திறந்து உள்ளே பார்த்துள்ளார். அங்கு உள்ள ஒரு ரூமில்  யோகேஸ்வரன் தான் வைத்திருந்த எஸ்எல்ஆர் துப்பாக்கியால் சுடப்பட்டு  ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனையடுத்து மற்ற காவலர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு யோகேஸ்வரனின் உடல் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சிவகங்கை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடம் வந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரோகித் நாதன், யோகேஸ்வரன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது பணிச்சுமை காரணமா ?, கொள்ளையடிப்பதற்காக கொலை செய்யப்பட்டாரா? என்று பல்வேறு கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

PREV
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி