காதலியைக் கொன்று உடலை 2 வாரமாக வீட்டு தொட்டியில் அடைத்து வைத்த இளைஞர்! வசமாக சிக்க வைத்த செல்போன்!

Published : Jun 10, 2023, 04:28 PM ISTUpdated : Jun 10, 2023, 04:32 PM IST
காதலியைக் கொன்று உடலை 2 வாரமாக வீட்டு தொட்டியில் அடைத்து வைத்த இளைஞர்! வசமாக சிக்க வைத்த செல்போன்!

சுருக்கம்

உ.பி.யில் இளைஞர் தனது காதலியை பெண்ணையே கொலை செய்துவிட்டு, சடலத்தை 2 வாரமாக வீட்டு தொட்டியில் மறைத்து வைத்திருந்தார்.

உத்தரப் பிரதேசத்தில் ஒரு நபர் தனது காதலியைக் கொன்று, சடலத்தை வீட்டில் உள்ள தொட்டியில் மறைத்து வைத்திருந்ததைக் கண்டுபிடித்துள்ளதாக வெள்ளிக்கிழமை காவல்துறை தெரிவித்துள்ளது. யமுனாபர் கர்ச்சனா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மஹேவா பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட அரவிந்த் என்பவரின் வீட்டில் இருந்து ராஜ் கேசர் (35) என்பவரின் உடல் வெள்ளிக்கிழமை போலீசாரால் மீட்கப்பட்டது. இரண்டு வாரங்களுக்கு முன்பு முன்பு அரவிந்த் தன் காதலி ராஜ் கேசரை கொன்று, அவரது சடலத்தை தனது வீட்டில் உள்ள தொட்டியில் மறைத்துவிட்டார் என்று காவல்துறை அதிகாரி விஸ்வஜீத் சிங் கூறி இருக்கிறார்.

செருப்பு பிஞ்சிடும்... நடுரோட்டில் சில்மிஷம் செய்தவரை செருப்பைக் கழற்றி அடித்த மாணவி

மே 30 அன்று, கேசரின் குடும்பத்தினர் அவரைக் காணவில்லை என்று காவல்துறையில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டிருந்தனர். கேசரின் செல்போனைப் பெற்று அதில் உள்ள அழைப்பு விவரத்தின் அடிப்படையில், விசாரணை நடத்தியதில் அரவிந்த் வீட்டில் ராஜ் கேசர் சடலமாக மீட்கப்பட்டார்.

அரவிந்த்தை காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டபோது, அவர் ராஜ் கேசரைக் தான் காதலித்து வந்ததையும் கொலை செய்து வீட்டில் ஒளித்துவைத்திருப்பதையும் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து ராஜ் கேசரின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

வாட்ஸ்அப் யுனிவர்சிட்டி தலைவரே... பிரதமரிடம் கேள்வி கேட்ட கார்கேவுக்கு பாஜக கொடுத்த பதிலடி!

இந்தக் கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்த விவரம் இதுவரை தெரியவரவில்லை. பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பின்பே கொலையின் தன்மையைப் பற்றி எதுவும் கூறமுடியும் என்று காவல்துறையினர் சொல்கின்றனர். இதனிடையே, கொலை செய்த அரவிந்த்திடமும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இளைஞர் தான் காதலித்த பெண்ணையே கொலை செய்துவிட்டு, உடலை இரண்டு வாரமாக வீட்டு தொட்டியில் மறைத்து வைத்திருந்த சம்பவம் அந்தப் பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ட்விட்டரில் டிக் வாங்கிய பயனர்களுக்கு மட்டும்... எலான் மஸ்க் வெளியிட்ட புதிய அறிவிப்பு

PREV
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
என் பொண்ண வாரி கொடுத்துட்டு இருக்கேன்! உனக்கு உல்லா*சம் கேக்குதா! டார்ச்சர் கொடுத்த திமுக வழக்கறிஞர் கொ*லை!