மன்னார்குடியில் மதுபோதையில் மூதாட்டியை சாகும் வரை கற்பழித்த கொடூரன் கைது

By Velmurugan s  |  First Published Jun 10, 2023, 2:33 PM IST

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே 78வயது மூதாட்டி கொலை வழக்கில் திடீர் திருப்பமாக மதுபோதையில் இருந்த இளைஞர் மூதாட்டியை கற்பழித்த நிலையில், அப்போது அவர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.


மன்னார்குடி அடுத்த ஏத்தக்குடி காலனி தெருவைச் சேர்ந்தவர் லட்சுமி (வயது 78). இவரது கணவர் இறந்துவிட்டார். இவருக்கு 5 மகள்கள். ஐந்து மகள்களையும் திருமணம் செய்து கொடுத்துவிட்டார். அதில் ஒரு மகள்  வீட்டில் லட்சுமி வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற திருவிழாவை ஒட்டி அன்று இரவு  நடைபெற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சியை காண மூதாட்டி லட்சுமி சென்றுள்ளார். 

இரவு  லட்சுமி வீடு திரும்பாததால் அவரது மகள் மற்றும் உறவினர்கள் பல இடங்களிலும் தேடியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அடுத்த நாள் மாலை வயல்வெளி பகுதியில் மூதாட்டி லட்சுமி காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த தலையாமங்கலம் காவல் துறையினர் மூதாட்டி லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Tap to resize

Latest Videos

undefined

திருவாரூரில் ஓர் உலக அதிசயம்; தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய அன்பு மகன்

தொடர்ந்து சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். மூதாட்டி அணிந்திருந்த தங்க நகைகளுக்காக மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு, நகையை பறித்து சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை சென்ற போது மூதாட்டி அணிந்திருந்த நகை அனைத்தும் கவரிங் என்று தெரியவந்தது. 

அதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணையை தீவிர படுத்தினர். மூதாட்டியின் உடல் கிடந்த இடத்தின் அருகே கைலி ஒன்றையும் கைப்பற்றினர். அந்த கைலி ஆடல், பாடல் நிகழ்ச்சியில் மது போதையில் ஆடிக் கொண்டிருந்த அதே ஊரைச் சேர்ந்த கணபதி (20) அணிந்திருந்த கைலி என்பது தெரிய வந்தது.

அம்மா, அப்பா சண்டையால் விரக்தி; வாழ்க்கையை முடித்துக்கொண்ட பள்ளி சிறுமி

உடனடியாக கணபதியைப் பிடித்து காவல் துறையினர் விசாரித்த நிலையில், நிகழ்ச்சி முடிந்தவுடன் வயல்வெளியில் வீட்டுக்கு திரும்பிய போது இந்த மூதாட்டி தனியாக வந்ததாகவும், அவர் அணிந்திருந்தவை தங்க நகைகள் என கருதி நகைகளை பறித்ததாகவும், அவை கவரிங் என்று தெரிந்தவுடன் மது போதையில் என்ன செய்வது என்று தெரியாமல் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதில் அந்த மூதாட்டி நிகழ்விடத்திலேயே இறந்து விட்டதாகவும் மூதாட்டியை வயலில் தள்ளி சேற்றில் புதைத்து விட்டு வீட்டிற்கு வந்ததாக காவல் துறையினரிடம் கணபதி தெரிவித்துள்ளார். உடனடியாக கணபதியை கொலை வழக்கு மற்றும் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

click me!