தந்தையின் தலையில் கல்லை போட்டு படுகொலை; தாயை அடித்ததால் மகன் ஆத்திரம்

By Velmurugan s  |  First Published Oct 5, 2023, 6:00 PM IST

ராணிபேட்டை மாவட்டத்தில் மதுபோதையில் தாயை அடித்து துன்புறுத்திய தந்தையின் தலையில் மகனே கல்லைப் போட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


ராணிபேட்டை மாவட்டம் அம்மூர் அடுத்த மேல்வேலம் கிராமம் பஜனை கோவில் தெரிவைச் சேர்ந்தவர் கோபி (வயது 50). கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாக மஞ்சுளா என்ற மனைவியும், யுவராஜ் (26) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோபி முறையாக வேலைக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. வேலைக்குச் செல்லுமாறு மஞ்சுளா கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கோபி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், மகன் யுவராஜின் முன்னிலையில் மனைவி மஞசுளாவை கடுமையா தாக்கியுள்ளார்.

Tap to resize

Latest Videos

undefined

மனைவி, 2 மகள்களை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு தலைமை காவலர் தற்கொலை; ஆந்திராவில் பரபரப்பு

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

தாய் தாக்கப்படுவதை பார்த்த ஆத்திரத்தில் யுவராஜ் திடீரென தந்தை கோபியை தடுக்க முயன்றதில் அவர் நிலைத்தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது பக்கத்தில் இருந்த கல்லை எடுத்து கோபியின் தலையில் போட்டதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயக்கமடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மது போதையில் குமரி கடற்கரையில் ஆட்டம் போட்ட நண்பர்கள்; கடலில் ஒருவர் மாயமானதால் பரபரப்பு

கோபியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராணிப்பேட்டை காவல் துறையினர் தந்தையின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த யுவராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!