ஓசூர் அருகே முன் விரோதம் காரணமாக நண்பர்களுக்குள் மோதல்; ஒருவர் கொலை

By Velmurugan s  |  First Published Mar 24, 2023, 12:45 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே முன்விரோதம் காரணமாக நண்பர்களுக்குள் ஏற்பட்ட மேதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 2 பேரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காரப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (வயது 27) ஓட்டுநர். இவரது நண்பர் மஞ்சுநாத். இவர்களுடைய நண்பர்கள் அருகேயுள்ள சோமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் உமேஷ், மூர்த்தி இவர்களும் கார் ஓட்டுநர்கள். நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு சமாதானம் ஆகி வந்தனர். 

இந்த நிலையில் நேற்று தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு காரப்பள்ளி அருகே உள்ள அரசு மதுபான கடைக்கு மோகனுடைய சகோதரர் சென்றுள்ளார். அப்போது உமேஷ், மூர்த்தி மீண்டும் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதை அறிந்த மோகன் மற்றும் நண்பர் மஞ்சுநாத் அங்கு சென்று வாக்குவரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

Tap to resize

Latest Videos

undefined

இதுபோல் செய்து கொண்டிருந்தால் உன்னை கொலை செய்து விடுவேன் என மோகன் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதை அடுத்து உமேஷ், மூர்த்தி இருவரும் மோகனிடம் நீ எங்களையே மிரட்டுகிறாயா என தெரிவித்து உன்னை இப்போதே கொலை செய்து விடுவோம் என்று இருசக்கர வாகனத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வந்து மோகன் பலமாக தாக்கி உள்ளனர். 

பாலியல் பாதிரியார் பெனடிக்கு பாதுகாப்பில்லை; குமரியில் இருந்து பாளை சிறைக்கு மாற்றம்

இதில் படுகாயம் அடைந்த மோகனை அவரது நண்பர் மஞ்சுநாத் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தலை மறவாகியிருந்த உமேஷ் மூர்த்தியை கைது செய்தனர். பின்னர் நீதிபதி முன் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கொலை களமாக மாறும் கோவை நீதிமன்றம்; பாதுகாப்பை பலப்படுத்திய காவல் துறை

யுகாதி பண்டிகை நாட்களில் நடைப்பெற்ற இந்த (தெலுங்கு வருட பிறப்பு ) கொலை சம்பவத்தால் இரு கிராமங்களிலும் பதற்றமும், அச்சமும் காணப்பட்டதால் பாதுகாப்பு கருதி 20க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

click me!