சொத்து தகராறில் ஒன்றரை வயது குழந்தை அடித்து கொலை; தாய் மாமனுக்கு ஆயுள் தண்டனை

Published : Feb 25, 2023, 07:54 PM IST
சொத்து தகராறில் ஒன்றரை வயது குழந்தை அடித்து கொலை; தாய் மாமனுக்கு ஆயுள் தண்டனை

சுருக்கம்

திருச்சி அருகே சொத்து தகராறில் 18 மாத குழந்தையை அடித்துக் கொன்ற தாய் மாமனுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள ஆமூர் கல்யாணசுந்தரம் தெருவை சேர்ந்தவர் முருகையா. இவரது மனைவி சுபாஷினி. இந்த தம்பதியினருக்கு சாதனா ஸ்ரீ, சஞ்சனா ஸ்ரீ என்ற இரட்டை குழந்தைகள் இருந்தனர். இதற்கு இடையே சஞ்சனா ஸ்ரீ தனது பெற்றோர்களுடனும், சாதனாஸ்ரீ சுபாஷினியின் தந்தையான முசிறி சடையப்பன் நகரில் உள்ள சாமிதாஸ் வீட்டிலும் வளர்ந்து வந்தனர். 

இந்நிலையில் சுபாஷினியின் தந்தை சுவாமிதாசுக்கும் அவரது மகன் லோகநாதனுக்கும் சொத்துக்களை பிரிப்பதில் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் லோகநாதன் தனக்கு வந்து சேர வேண்டிய சொத்துக்களை தனது சகோதரி சுபாஷினியின் மகள் சாதனா ஸ்ரீக்கு எழுதி வைத்து விடுவாரோ என்ற பயம் இருந்துள்ளது. 

அத்துடன் தன்னுடைய குழந்தையை பார்த்துக் கொள்வதை விட சாதனா ஸ்ரீயை பராமரிப்பதிலேயே சாமிதாஸ் அதிக கவனம் செலுத்தியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த லோகநாதன் கடந்த 31.12.2018 அன்று தனது சகோதரி சுபாஷினியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அதே நாளில் தாத்தா வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சாதனா ஸ்ரீயை தரையில் தூக்கி போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். 

சென்னை சாலையோர உணவகங்களில் பூனைக்கறி பிரியாணி? உணவு பிரியர்கள் ஷாக்

இதில் படுகாயம் அடைந்த குழந்தை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 4.1.2019 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதுகுறித்து கொலை வழக்கு பதிவு செய்த முசிறி காவல்துறையினர் லோகநாதனை கைது செய்தனர். இந்த வழக்கு திருச்சி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

நேர்மையான அதிகாரிக்கு ரூ.1 கோடி பரிசு; விண்ணப்பிக்க இன்றே கடைசி: நூதன போஸ்டரால் சலசலப்பு

இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிவடைந்து இன்று நீதிபதி செல்வமுத்துக்குமார் தீர்ப்பு வழங்கினார். அதில் குழந்தையை சொத்து தகராறு காரணமாக கொடூரமாக கொலை செய்த லோகநாதனுக்கு ஆயுள் தண்டனையும் 3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இதை அடுத்து லோகநாதன் காவல்துறை பாதுகாப்புடன் அழைத்துச்சென்று திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!