Indore: கல்லூரி வளாகத்திலேயே முதல்வருக்கு தீ வைத்துக் கொன்ற மாணவர்!

By SG Balan  |  First Published Feb 25, 2023, 6:13 PM IST

மதிப்பெண் பட்டியல் வழங்குவதைத் தாமதப்படுத்தியதாகக் கூறி முன்னாள் மாணவர் தீயிட்டுக் கொளுத்தியதில் கல்லூரி முதல்வரை உயிரிழந்துவிட்டார்.


மதிப்பெண் பட்டியல் வழங்குவதைத் தாமதப்படுத்தியதாகக் கூறி முன்னாள் மாணவர் ஒருவர் கல்லூரி முதல்வரை தீ வைத்து எரித்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூரில் உள்ள சிம்ரோல் பகுதியில் தனியார் பார்மா கல்லூரி ஒன்றின் முதல்வராக இருந்தவர் விமுக்தா சர்மா (54). பிப்ரவரி 20ஆம் தேதி கல்லூரி வளாகத்தில் முன்னாள் மாணவர் ஒருவர் இவர் மீது தீயிட்டு எரிக்க முயன்றார். படுகாயத்துடன் இந்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிய சர்மா  சனிக்கிழமை அதிகாலை 3.45 மணியளவில் உயிரிழந்தார்.

Tap to resize

Latest Videos

கல்லூரி வளாகத்தில் இவர் மீது தீ வைத்த முன்னாள் மாணவர் அசுதோஷ் ஸ்ரீவஸ்தவா (24) மீது கொலை செய்ததாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Chennai: சென்னையில் சிகரெட் வாங்கித் தர மறுத்த இளைஞர் படுகொலை

ஜூலை 2022 இல் எட்டாவது மற்றும் செமஸ்டரில் தேர்ச்சி பெற்ற முன்னாள் பி.பார்ம் மாணவர் ஶ்ரீவஸ்தவா. இவர் தனக்கு மதிப்பெண் பட்டியல் கிடைக்காததால், கல்லூரி முடிவுற்றபின் முதல்வர் காரில் வீடுக்குச் செல்ல இருந்த நேரத்தில் அவர் மீது தீ வைத்துள்ளார். படுகாயமுற்ற முதல்வர் சர்மாவுக்கு உடலில் 80 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்டன. அதே நேரத்தில் ஶ்ரீவத்ஸவாவுக்கும் 40 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டது.

கல்லூரி முதல்வருக்கு தீ வைத்த பிறகு, அவர் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடி அருகில் உள்ள டிஞ்சா நீர்வீழ்ச்சியில் குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றார். ஆனால் அந்த சமயத்தில் அங்கே இருந்த போலீஸ் கான்ஸ்டபிள் வீர் சிங் சரியான நேரத்தில் ஸ்ரீவஸ்தவாவின் உயிரைக் காப்பாற்றினார்.

Juhu murder: தாயைக் கொன்று பள்ளத்தாக்கில் வீசிய மகன்! அம்பலமான அதிர்ச்சி தகவல்கள்!

இந்த மாணவர் சட்டத்தை தன் கையில் எடுத்து வன்முறையில் இறங்கியது முதல் முறை அல்ல. இதற்கு முன்பே, நவம்பர் 2022 இல், இதே பிரச்சினையில் கல்லூரியின் மற்றொரு பேராசிரியரான விஜய் படேலைத் தாக்கினார். அது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட ஶ்ரீவத்ஸவா சில வாரங்களுக்கு முன்புதான் ஜாமீனில் வெளியே வந்தார்.

பிப்ரவரி 2022 இல், கல்லூரி முதல்வர் விமுக்தா சர்மாவே காவல்துறையில் ஶ்ரீவஸ்தவா பற்றி புகார் அளித்துள்ளார். ஏழாவது செமஸ்டர் தேர்வில் தேர்ச்சி பெறத் தவறியதால் கல்லூரி வளாகத்திலேயே தற்கொலை செய்துகொள்வதாக ஶ்ரீவத்ஸவா மிரட்டினார் என்று சிம்ரோல் காவல் நிலையத்துக்கு முதல்வர் விமுக்தா சர்மா கடிதம் எழுதியிருந்தார். அதே கடிதத்தில், ஶ்ரீவத்ஸவா 12ஆம் வகுப்பு படிக்கும்போதே தற்கொலைக்கு முயன்றவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தார்.

பாகிஸ்தான் அணிக்கு ஆதரவு தெரிவித்தவரை 'பாரத் மாதா கி ஜெய்' கோஷமிட வற்புறுத்திய கும்பல்

click me!