கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த முள்ளிகிராம்பட்டு கிராமத்தில் அடித்துக் கொலை செய்தவரை கைது செய்யக்கோரி ஊர் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த முள்ளி கிராம்பட்டு பகுதியில் நான்கு நாட்களுக்கு முன்னதாக கோதண்டபாணியின் மகனான விக்னேஷ், தனசேகர் என்பவரை தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்குதலில் பலத்த காயம் அடைந்த தனசேகர் புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
புதுவை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார், தனசேகர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய விக்னேஷ் மீது வழக்குப் பதிய வேண்டும் என நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். ஆனால் அந்த புகாரை வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை புதுச்சேரி மருத்துவமனையில் தனசேகர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரெழுந்தார்.
கடைக்கு சென்ற சிறுவன் மதுபாட்டிலால் குத்தி கொலை; போதை ஆசாமிகள் வெறிச்செயல்
இதனைத் தொடர்ந்து தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். தாக்குதல் வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி நெல்லிக்குப்பம் போஸ்ட் ஆபீஸ் அருகில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் ஈடுபட்டனர்.
இளம் பெண்ணுக்கு கடன் கொடுத்து உதவுவது போல் பாலியல் தொல்லை: விஏஓ கைது
தகவல் அறிந்து பண்ருட்டி காவல் துணை கண்காணிப்பாளர் சபியுல்லா, காவல் ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து ஊர் பொதுமக்கள் சாலை மரியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.