பெரம்பலூர் மாவட்டத்தில் 14 வயது சிறுவன் மதுபாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அருகில் உள்ள இந்திரா நகரில் வசித்து வரும் கணேசன் என்பவரின் மகன் ரோஹித் ராஜ் (வயது 14). ரோஹித் ராஜ் இந்திரா நகரில் உள்ள பெட்டி கடை ஒன்றில் தனது தம்பிகளுடன் பேசிக்கொண்டிருந்தார் அப்போது அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் சீனிவாசன் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் அங்கு மதுபோதையில் வந்துள்ளனர்.
ரோஹித்ராஜை இந்திரா நகர் அங்காளம்மன் கோவில் செல்லும் சாலையில் உள்ள பொதுக்கழிப்பிடத்திற்கு சிறுவனை அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில், மதுபாட்டிலை உடைத்து சிறுவனின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர்.
undefined
சிறுவன் அங்கிருந்து ரத்த காயங்களுடன் வெளியே வந்து நடுரோட்டில் விழுந்து துடி துடித்து இறந்துள்ளான். அருகில் இருந்தவர்கள் பெரம்பலூர் நகர காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இளம் பெண்ணுக்கு கடன் கொடுத்து உதவுவது போல் பாலியல் தொல்லை: விஏஓ கைது
மேலும் சிறுவனை கொலை செய்து தப்பியோடிய சீனிவாசன் மற்றும் அவனது நண்பர்களை தேடி வருகின்றனர். காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில் சீனிவாசன் சுமார் 20 வயதுடைய இளைஞர் என்று கூறப்படுகிறது. மேலும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கங்களில் ஈடுபடுபவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கொலை நடந்த போது சீனிவாசன் மற்றும் அவனது நண்பர்கள் மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு கோடை சிறப்பு விரைவு ரயில்கள் - தெற்கு ரயில்வே
சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷியாம்ளாதேவி. கொலை நடந்தது குறித்து கேட்டறிந்தார். காவல்துறையினர் ஒரு பக்கம் இளைஞர்கள் தீய பழக்கம் குற்ற வழக்குகளில் ஈடுபடாமலிருக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், அவ்வபோது பொதுமக்களை சந்தித்து குற்ற தடுப்பு பிரசாரமும் செய்து வரும் இந்த சூழலில் தற்போது சிறுவன் இப்படி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரம்பலூர் பொதுமக்கள் மத்தியில் பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.