'நீ வீட்டை விட்டு வந்துரு.. போயிறலாம்'..! ஆசை வார்த்தைகள் பேசி சிறுமியை மயக்கிய வாலிபர்..!

By Manikandan S R S  |  First Published Feb 10, 2020, 11:38 AM IST

சிறுமியுடன் முத்துக்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுமியும் அவருடன் நன்றாக பேசி பழகி வந்துள்ளார். அதை வாய்ப்பாக எடுத்துக்கொண்ட முத்துக்குமார் சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி வீட்டை விட்டு வெளியே வந்துவிடும்படி கூறியுள்ளார். சிறுமியும் அவரது பேச்சை நம்பி கடந்த வெள்ளிக்கிழமை அன்று வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.


திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே இருக்கிறது செம்பாகவுண்டம்பாளையம் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் பானு(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 14 வயது சிறுமியான இவர் அங்கிருக்கும் ஒரு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். நம்பியூர் அருகே இருக்கும் எம்மாம்பூண்டி ராயா்பாளையம் என்கிற ஊரைச் சேர்ந்தவர் சம்பூதத்தான். இவரது மகன் முத்துக்குமார்(22).

Tap to resize

Latest Videos

undefined

சிறுமியுடன் முத்துக்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுமியும் அவருடன் நன்றாக பேசி பழகி வந்துள்ளார். அதை வாய்ப்பாக எடுத்துக்கொண்ட முத்துக்குமார் சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி வீட்டை விட்டு வெளியே வந்துவிடும்படி கூறியுள்ளார். சிறுமியும் அவரது பேச்சை நம்பி கடந்த வெள்ளிக்கிழமை அன்று வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இரவு வெகு நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை பல இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனால் சிறுமி கிடைக்கவில்லை.

பின் உறவினர்கள் உதவியுடன் தீவிரமாக தேடியதில் சிறுமி பவானிசாகர் பேருந்து நிலையம் பகுதியில் இருப்பது தெரிய வந்தது. அதையறிந்து அங்கு விரைந்த பெற்றோர் சிறுமியை மீட்டனர். அவரிடம் விசாரித்ததில் முத்துக்குமார் அழைத்து வந்ததை சிறுமி கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவலர்கள் முத்துக்குமாரை கைது செய்தனர். போக்சோவின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

அசுர வேட்டையாடும் கொரோனா வைரஸ்..! 908 உயிர்களை காவு வாங்கியது..

click me!