ஆசிட் வீச்சில் கைது.. 17 ஆண்டுகளுக்கு பின் புகார் கொடுத்த பெண்ணை தேடி வந்து கதற கதற பலாத்காரம் செய்த கொடூரன்.!

Published : May 11, 2022, 02:59 PM ISTUpdated : May 11, 2022, 03:02 PM IST
ஆசிட் வீச்சில் கைது.. 17 ஆண்டுகளுக்கு பின் புகார் கொடுத்த பெண்ணை தேடி வந்து கதற கதற பலாத்காரம் செய்த கொடூரன்.!

சுருக்கம்

கடந்த 2021ம் ஆண்டு டிசம்பரில், டெல்லியில் வசிக்கும் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று  கணவர் மற்றும் குழந்தைகள் மீது ஆசிட் வீசி விடுவேன் என மிரட்டி பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அதனை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு சமூகவலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று அவ்வபோது மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளான்.

ஆசிட் வீச்சில் சிறை சென்று விடுதலையான நபர் 17 ஆண்டுகளுக்கு பின் அதே பெண்ணை தேடி சென்று பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது. 

உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூர் பகுதியைச் சேர்ந்தவன் கபில் குப்தா (42). இவர் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் 2 மாதங்களாக தேடப்பட்டு வந்த நிலையில், கர்நாடகாவில் பதுங்கியிருந்த வரை டெல்லி போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். இவன் கடந்த 2005ம் ஆண்டு பெண் ஒருவர் மீது ஆசிட் வீசியுள்ளான். இந்த சம்பவத்தில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று விடுதலையானார். வெளியே வந்த கபில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரம் குறித்து கான்பூரில் உள்ள தனக்கு தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டுள்ளார்.

அதன்பின்பு கடந்த 2021ம் ஆண்டு டிசம்பரில், டெல்லியில் வசிக்கும் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று  கணவர் மற்றும் குழந்தைகள் மீது ஆசிட் வீசி விடுவேன் என மிரட்டி பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அதனை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு சமூகவலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று அவ்வபோது மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளான்.

இதனால், பொறுமை இழந்த பெண் டெல்லி சுல்தான்புரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, கபில் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த அவனை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், பெங்களூருவில் பதுங்கி இருந்த அவனை டெல்லி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

நான் உனக்கு போதாதா! என் பொண்ணு கேக்குதா.. ஆத்திரத்தில் 46 வயது ஆன்டி.. அலறிய சூர்ய பிரதாப் சிங்
சார்.. நான் உங்க ஸ்டூடண்ட்ஸ்.! இப்படியெல்லாம் பண்ணாதீங்க! எவ்வளவு சொல்லியும் கேட்காத ஆசிரியருக்கு செருப்பு மாலை