மதுரை மாவட்டம் வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு கார்த்திக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் வெளியில் சென்றுள்ளனர்.
மதுரையில் பிளஸ் 1 மாணவியை காதலிப்பதாக கூறி காதலன் உட்பட 3 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு கார்த்திக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் வெளியில் சென்றுள்ளனர். அப்போது, திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அடிக்கடி பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், கீரைத்துறையில் உள்ள அக்கா வீட்டிற்கு சென்றிருந்த மாணவியை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை அவரது நண்பர்கள் மறைந்திருந்து செல்போனில் வீடியோகா பதிவு செய்துள்ளனர். இதனை காட்டி மிரட்டி காதலன் துணையோடு அவரது நண்பர்கள் அந்த மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது தொடர்பாக வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டினர்.
இதுகுறித்து மாணவி நடந்தவற்றை பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் கார்த்திக், ஆதி, ஹரிஸ் உள்ளிட்ட 3 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.