அத்திவரதரை தமது குடும்பத்தினருடன் வி.ஐ.பி. வரிசையில் சென்று வரிச்சியூர் செல்வம் தரிசனம் செய்தது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
அத்திவரதரை தமது குடும்பத்தினருடன் வி.ஐ.பி. வரிசையில் சென்று வரிச்சியூர் செல்வம் தரிசனம் செய்தது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம். இவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. உடம்பு முழுவதும் கிலோக் கணக்கில் தங்க நகைகளை இரும்பு வடங்கள் போன்று அணிந்துகொண்டு எப்போதும் காட்சி தரும் இவர், அவ்வப்போது பரபரப்பாக பேசப்படுவார்.
காஞ்சியில் அத்திவரதரை தரிசிக்க லட்சக்கணக்கான மக்கள் முண்டியடித்தும், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தபோதும், பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட வரிச்சியூர் செல்வம், வழக்கம்போல் நடமாடும் நகைக்கடையாய் குடும்பத்தினரோடு வந்து வி.ஐ.பி. வரிசையில் அத்திவரதரை சேவித்து சென்றார். ஒரு ரவுடிக்கு எப்படி வி.ஐ.பி. பாஸ் கொடுக்கப்பட்டது. தமிழ்நாட்டின் சட்டம் ஒழுந்து இதுதானா என்று அப்போது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
இந்தநிலையில் தான் தற்போது தமிழ்நாட்டில் ரவுடிகள் வேட்டையை தொடங்கியுள்ள டி.ஜி.பி. சைலேந்திரபாபு, மாநிலம் முழுவதும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளவர்களை கைது செய்ய உத்தரவு பிறப்பித்திருக்கிறார். அந்தவகையில் மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் குற்றவழக்குகளில் தொடர்புடைய நூற்றுக்கணக்கானோரிடம் நன்னடத்தை பத்திரம் எழுதி வாங்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் வரிச்சியூர் செல்வமும் இடம்பெற்றுள்ளார். மதுரை கருப்பாயூரணி போலீசார் வரிச்சியூர் செல்வத்தை நேரில் அழைத்து அவரிடம், குற்ற தடுப்பு நடவடிக்கைக்கன பத்திரம் எழுதி வாங்கி எச்சரித்து அனுப்பியுள்ளனர்.