வீட்டுக்குள் நுழைந்து சாவியை எடுத்து காரை ஓட்டிச் சென்ற திருடன்.. 3 ஆயிரத்திற்காக கைவரிசை .. பகீர் வாக்குமூலம்

By Ezhilarasan BabuFirst Published Oct 6, 2021, 11:08 AM IST
Highlights

அந்த நபர் ஆட்டோ ஓட்டுநராக  இருந்து வந்ததும், தான் தாரிக் வீட்டில் வேலை செய்த நிலையில், சம்பள பாக்கியை கேட்க சென்றதாகவும், ஆனால் வீட்டில் யாரும் இல்லாததால் வழக்கம்போல வீட்டிற்குள் நுழைந்து சாவியை எடுத்து காரை திருடிக் கொண்டு வந்ததையும் ஒப்புக்கொண்டார். 

முதலாளி சம்பளம் பாக்கி கொடுக்காததால் அவரின் வீட்டுக்குள் நுழைந்து சாவியை எடுத்து காரை கடத்திச் சென்ற ஓட்டுநரை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை மயிலாப்பூர் பகுதியில் ராதாகிருஷ்ணன் சாலை 6-வது தெருவில் வசித்து வருபவர் தாரிக் அக்தர். இவர் துணிக்கடை நடத்தி வருகிறார், அவரின் வீட்டின் வெளியே நின்றிருந்த கார் திடீரென மாயமானதாக அவர் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர், 

இதை படியுங்கள்: 5 வருஷம் ஆனாலும் திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றாது.. முதல்வர் ஸ்டாலினை வம்பிழுத்த எஸ்.பி வேலுமணி.

அப்பகுதியில் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், அந்த காரை யாரோ ஒருவர் ஓடிச் செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. மர்ம நபரால் கார் திருடப்பட்டு இருக்கிறது என்பதை உணர்ந்த போலீசார், கார் ஜிபிஎஸ் மூலம் ஆய்வு செய்தனர். அந்தக் கார்  போரூர் அருகே உள்ள காட்டுப்பாக்கத்தில் இருப்பதாக காட்டியது, அங்கு விரைந்து சென்ற போலீசார் காரை சுற்றி வளைத்தனர். அப்போது காருக்குள் ஒரு நபர் உறங்கிக் கொண்டிருந்தார். உடனே அவரைக் கைது செய்து  காருடன் அவரை காவல் நிலையம் கொண்டு வந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

இதை படியுங்கள்: குப்பைக்கு தங்க மோதிரம் வழங்கிய அதிமுக.. அமைச்சர் மா.சு வெளியிட்ட பகீர் புகார்.

அந்த நபர் ஆட்டோ ஓட்டுநராக  இருந்து வந்ததும், தான் தாரிக் வீட்டில் வேலை செய்த நிலையில், சம்பள பாக்கியை கேட்க சென்றதாகவும், ஆனால் வீட்டில் யாரும் இல்லாததால் வழக்கம்போல வீட்டிற்குள் நுழைந்து சாவியை எடுத்து காரை திருடிக் கொண்டு வந்ததையும் ஒப்புக்கொண்டார். அவர் மீது திருட்டு வழக்கு பதிவுசெய்த போலீசார் அவரை கைது செய்து , நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சம்பள பாக்கி வெறும்  3 ஆயிரம் ரூபாய்க்காக பல லட்சம் மதிப்புள்ள காரை ஓட்டுனர் திருடிச்சென்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 

click me!