’தியாகு நடத்திய பாலியல் வக்கிரங்களுக்கெல்லாம் சுப.வீ.தான் சாட்சி’ இறங்கி அடிக்கும் கவிஞர் தாமரை

Published : Oct 11, 2018, 04:30 PM IST
’தியாகு நடத்திய பாலியல் வக்கிரங்களுக்கெல்லாம் சுப.வீ.தான் சாட்சி’ இறங்கி அடிக்கும் கவிஞர் தாமரை

சுருக்கம்

’இன்ஸ்பெக்டர் ஒரு புகார் கொடுக்க வந்திருக்கேன்’ ‘தப்பு நடந்து 14 வருஷம் ஆச்சா’ என்ற ட்வீட் தற்போது வரலாகி வருகிறது.

’இன்ஸ்பெக்டர் ஒரு புகார் கொடுக்க வந்திருக்கேன்’ ‘தப்பு நடந்து 14 வருஷம் ஆச்சா’

என்று திமுகவின் மேல் இருக்கும் கண்மூடித்தனமான பாசத்தால் கவிஞர் வைரமுத்துவுக்கு ஆதரவாகப் போட்ட ட்விட்டால் வலைதள வட்டாரங்களில் நேற்றுமுதல் அறுத்துக் கிழித்து தொங்கவிடப்பட்டுக்கொண்டிருக்கிறார் பேராசிரியரும் திமுக விசுவாசியுமான சுப.வீரபாண்டியன்.

அவர்களின் தொடர்ச்சியாக பேரசிரியர் மீது பெரும் தாக்குதல் நடத்தியிருக்கிறார் கவிஞரும் பாடலாசிரியருமான தாமரை.

இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் ,’ இன்னுமா இந்த சுப.வீயையெல்லாம் நம்பிக்கொண்டிருக்கிறீர்கள். சுப.வீ.யும் தியாகுவும் தமிழ் தமிழர் இயக்கத்தில் பொதுச்செயலாளர், தலைவர் என ஒன்றாகப் பொழுதைப் போக்கிக்கொண்டிருந்தார்கள். தியாகு நடத்திய பாலியல் வக்கிரங்களுக்கெல்லாம் அன்னார் சுப.வீதான் சாட்சி. மறைப்பது, மாற்றுவது, திரிப்பது, தூற்றுவது எல்லாம் கைவந்த கலை இவர்கள் இரண்டு பேருக்கும்…

இயக்கத்தின் பேரால் இரண்டுபேரும் நடத்திய அழிச்சாட்டியங்களுக்கெல்லாம் நானே வாழும் சாட்சி’ என்று குமுறிக்கொட்டியிருக்கிறார் தாமரை.

வைரமுத்துவுக்கு வக்காலத்து வாங்கியதை ஒட்டி, அடுத்து யாருக்கும் பதில்கள் கனத்த மவுனத்தோடு அலைகிறார் சுபவீ.

PREV
click me!

Recommended Stories

Sathankulam Case: இந்தியாவையே உலுக்கிய தீர்ப்பு! 9 போலீசாருக்கு மரண தண்டனை.. நடந்தது என்ன?
பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி... லஷ்கர்-இ-தொய்பா பயங்கர ஸ்கெட்ச்..! டெல்லியில் பரபரப்பு..!