காதலனுடன் தகராறு ! நெஞ்சை உலுக்கும் பகீர் முடிவெடுத்த காதலி !!

Selvanayagam P   | others
Published : Jan 02, 2020, 07:58 AM IST
காதலனுடன் தகராறு ! நெஞ்சை உலுக்கும் பகீர் முடிவெடுத்த காதலி !!

சுருக்கம்

கோவை அருகே காதலனுடன் பேசிக் கொண்டே நடந்த சென்ற காதலி , அவருடன் ஏற்பட்ட தகராறில் அருகே சென்று கொண்டிருந்த ரயில் முன்பு விழுந்து திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கொண்டசாமி நகரை சேர்ந்தவர் கவுசிகாதேவி. கல்லூரி மாணவியான  இவருக்கும்  அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக வேலை பார்த்து வரும் ரமேசுக்கும்  பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. காதலர்கள் இருவரும் பல இடங்களுக்கு சென்று  உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.  இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவரும் சந்தித்து பேசாமல் இருந்தனர்.

இந்த நிலையில் அந்த பஸ் டிரைவர், கவுசிகாதேவிக்கு போன் செய்து உன்னுடன் பேச வேண்டும் வா என்றார். இதையடுத்து கவுசிகா தேவி நேற்று மாலை அந்த வாலிபரை சந்திப்பதற்காக சென்றார். பின்னர் அவர்கள் 2 பேரும் பெரியநாயக்கன்பாளையம் வீரபாண்டி பிரிவு அருகே இருவரும் சந்தித்து பேசி கொண்டிருந்தனர். அப்போது திடீரென அவர்கள் 2 பேருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் வாக்குவாதம் முற்றவே மனம் உடைந்த கவுசிகா தேவி அந்த பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்திற்கு சென்றார். பின்னர் அந்த வழியாக இரவு 8 மணியளவில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு வந்த நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தார். இதில் தூக்கி வீசப்பட்டு உடல் சிதறி சம்பவ இடத்திலேயே கவுசிகாதேவி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த  ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கவுசிகாதேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி