தகாத உறவு..? 3 மாதங்களில் காதல் மனைவியை குத்திக் கொலை செய்த கணவன்..!

Published : Mar 31, 2019, 09:55 AM IST
தகாத உறவு..? 3 மாதங்களில் காதல் மனைவியை குத்திக் கொலை செய்த கணவன்..!

சுருக்கம்

காதலித்து திருமணம் செய்த மனைவியை குடும்ப தகராறு காரணமாக கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து கணவனை, போலீசார் கைது செய்துள்ளனர்.

காதலித்து திருமணம் செய்த மனைவியை குடும்ப தகராறு காரணமாக கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து கணவனை, போலீசார் கைது செய்துள்ளனர். 

சென்னை, கே.கே. நகர் அடுத்த நெசப்பாக்கம், பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி சரிதா (43). இவர்களது மகள் சந்தியா (20). அதே பகுதியை சேர்ந்த  எலக்ட்ரீஷியன் அருள்குமார் (24) என்பவரை சந்தியா காதலித்துள்ளார். இதை அறிந்த பெற்றோர், கடந்த ஜனவரி மாதம் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர். அதன்பின் அருள்குமார், மாமனார் வீட்டில் மனைவி சந்தியாவுடன் வசித்து வந்துள்ளார். ஆனால், 3 மாதமே ஆன நிலையில் மனைவி தன் குடும்பத்துடன் இருக்க சந்தியா வற்புறுத்தினார். 

ஆனால் அருள்குமார் தனிகுடித்தனம் செல்ல வேண்டும் என்று கூறியதால் இவர்களுக்குள் அடிக்கடி சண்டை, சச்சரவு ஏற்பட்டுள்ளது. மேலும் சந்தியாவின் நடவடிக்கைகளில் சந்தேகப்பட்டு, அருண்குமார் தகராறு செய்து வந்தான். இந்நிலையில், நேற்று காலை 11 மணி அளவில் மறுபடியும்  வழக்கம் போல் தம்பதிக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது  மாமியார் சரிதா, இருவரையும் சமாதானப்படுத்தியுள்ளார். ஆனால் சமாதானம் அடையாத அருள்குமார், ஆத்திரத்தில் கத்தியால் சந்தியாவை குத்துவதற்கு பாய்ந்துள்ளார். இதை மாமியார் தடுக்க முயன்றபோது அவரையும் கத்தியால் குத்தி உள்ளார். 

அதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் ஆத்திரம் அடங்காத அருள்குமார் தனது மனைவி சந்தியாவை கத்தியால் தொண்டை பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார். இதனையடுத்து ரத்த வெள்ளத்தில் சரிந்து சந்தியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாமியாரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்து பார்த்த பொதுமக்கள் சந்தியா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் தப்பிக்க முயன்ற அருள்குமாரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.

இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மனைவியை கொலை செய்த அருள்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த சந்தியாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காதலித்து திருமணம் செய்து மூன்று மாதங்களே ஆனநிலையில் மனைவியை கத்தியால் குத்தி கணவனே  கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

திருநங்கைக்கு 25 இடங்களில் அரிவாள் வெட்டு! சாக்கடையில் வீசிய லாரி டிரைவர்! நடந்தது என்ன? பரபரப்பு தகவல்!
ஒரே நேரத்தில் 13 அரசு ஊழியர்கள் வீடுகளில் கொள்ளை! வடமாநில குற்றவாளிக்கு சரியான ஆப்பு வைத்த கோவை போலீஸ்