’சரவணபவன் அண்ணாச்சியை சிக்க வைத்ததே ஜெயலலிதாதான்..’ ஜீவஜோதி நெகிழ்ச்சி..!

Published : Mar 30, 2019, 11:30 AM ISTUpdated : Mar 30, 2019, 12:06 PM IST
’சரவணபவன் அண்ணாச்சியை சிக்க வைத்ததே ஜெயலலிதாதான்..’  ஜீவஜோதி நெகிழ்ச்சி..!

சுருக்கம்

எனது கணவன் கொலைவழக்கில் ராஜகோபாக்ல் மீது உரிய நடவடிக்கை எடுத்து உதவிய ஜெயலலிதா உயிருடன் இருந்து இருந்தால் அவரது காலில் விழுந்து நன்றி சொல்லி இருப்பேன் என ஜீவஜோதி நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார். 

எனது கணவன் கொலைவழக்கில் ராஜகோபாக்ல் மீது உரிய நடவடிக்கை எடுத்து உதவிய ஜெயலலிதா உயிருடன் இருந்து இருந்தால் அவரது காலில் விழுந்து நன்றி சொல்லி இருப்பேன் என ஜீவஜோதி நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார். 

ஜீவஜோதியின் கணவன் சாந்தகுமாரை கொலை செய்த வழக்கில் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபலுக்கு அளித்த ஆயுள் தண்டைனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்நிலையில் தஞ்சாவூரில் வசித்து வரும் ஜீவஜோதி நிருபர்களை சந்தித்து பேசினார். அப்போது, ‘’உச்சநீதிமன்றம் தீர்ப்பு விவரம் தெரிந்ததும், மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இதற்காக உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு மட்டுமல்ல, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

ராஜகோபால் என்னை கொடுமை செய்தபோது, ஜெயலலிதாவை அவரது வீட்டில் சந்தித்து விவரங்களை சொன்னேன். அப்போது அவர் ஆட்சியில் இல்லை. அதே நேரம், அவர் எனக்கு உதவி செய்வதாக உத்தரவாதம் அளித்தார். 2001-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வரானார். சாந்தகுமார் கொலை செய்யப்பட்டபோது, அந்த வழக்கை போலீசார் தீவிரமாக புலன்விசாரணை செய்தனர். ஒருவேளை ஜெயலலிதா தற்போது உயிரோடு இருந்திருந்தால், கண்டிப்பாக அவரை நேரில் சந்தித்து, காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று இருப்பேன். போலீசாரும் சரியாக புலன்விசாரணை செய்து, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளனர். அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். சம்பவம் நடந்து பல ஆண்டுகள் ஆனாலும், இறுதியில் நீதி வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என அவர் கூறினார்.

கடந்த 2006-ம் ஆண்டு தண்டபாணி என்பவரை ஜீவஜோதி 2-வது திருமணம் செய்து கொண்டார். அவர்கள் தஞ்சையில் வசித்து வருகிறார்கள். தண்டபாணி வெளிநாடுகளுக்கு ஊறுகாய், அப்பளம் ஏற்றுமதி செய்கிறார். ஜீவஜோதி அதே பகுதியில் தையல் கடை மற்றும் ஓட்டல் நடத்தி வருகிறார்.

PREV
click me!

Recommended Stories

திருநங்கைக்கு 25 இடங்களில் அரிவாள் வெட்டு! சாக்கடையில் வீசிய லாரி டிரைவர்! நடந்தது என்ன? பரபரப்பு தகவல்!
ஒரே நேரத்தில் 13 அரசு ஊழியர்கள் வீடுகளில் கொள்ளை! வடமாநில குற்றவாளிக்கு சரியான ஆப்பு வைத்த கோவை போலீஸ்