நான் காதலிக்கிற பொண்ணையே ரூட் விடுறீயா? ஆத்திரத்தில் நண்பனின் தலையை துண்டித்த சிறுவன்...!

Published : Aug 03, 2021, 08:14 PM ISTUpdated : Aug 03, 2021, 08:17 PM IST
நான் காதலிக்கிற பொண்ணையே ரூட் விடுறீயா? ஆத்திரத்தில் நண்பனின் தலையை துண்டித்த சிறுவன்...!

சுருக்கம்

 நான், ஏற்கனவே மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வந்தேன்.அப்போது அவன் செல்போன் பார்த்துக் கொண்டிருந்தான். பின்னால் வந்த நான், மதன்குமாரின் கழுத்தில் ஓங்கி அரிவாளால் வெட்டினேன். இதில் அவன், தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தூத்துக்குடியில் தான் காதலித்த பெண்ணை, நண்பனும் காதலித்ததால் ஆத்திரத்தில் நண்பனை வெட்டிக் கொன்ற  17 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் மதன்குமார்(21). பெயின்டிங் வேலை பார்க்கும் இவர், கடந்த 30-ம் தேதி மந்தித்தோப்பு காட்டுப்பகுதியில் தலைதுண்டிக்கப்பட்ட நிலையில் மர்மான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவரது உடலின் அருகில் மதுபாட்டில், கூல்டிரிங்ஸ், பிளாஸ்டிக் டம்ளர் ஆகியவை கிடந்தன. இதனால், மதன்குமாரை மது அருந்துவதற்காக அழைத்து வந்து கொலை செய்திருக்கலாம் என மேற்கு காவல் நிலையப் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில் மதன்குமாரின் நண்பரான தீர்த்தாம்பட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுவனைக் கைது செய்துள்ளனர். போலீசாரின் விசாரணையில் காதல் போட்டியில் மதன்குமாரைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும், அந்தச் சிறுவனிடம் இருந்தது கொலை செய்யப் பயன்படுத்திய அரிவாள், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக சிறுவன் போலீசில் அளித்த வாக்குமூலத்தில்;- நானும், மதன்குமாரும் நண்பர்கள். இருவரும் ஒன்றாகவே பெயின்டர் வேலைக்கு செல்வோம். நான் ஒரு இளம்பெண்ணை காதலித்தேன். அதே பெண்ணை அவனும் காதலித்து வந்துள்ளான். இந்த விவரம் எனக்கு தெரியாது. சில தினங்களுக்கு முன் நான் அவனது செல்போனை வாங்கி பார்த்தபோது அந்த இளம்பெண்ணுடன் அவன் சார்ட்டிங் செய்திருப்பது தெரியவந்தது. இதனால் நான், மதன்குமாரை கண்டித்தேன். ஆனாலும் அவன் கேட்கவில்லை. நான் காதலிக்கும் பெண்ணை, மதன் குமாரும் காதலித்ததால் அவனை அவனை தீர்த்துக் கட்ட முடிவு செய்தேன். அதன்படி சம்பவத்தன்று மந்தித் தோப்பு காட்டுப்பகுதிக்கு முன் கூட்டியே சென்று அங்குள்ள முட்செடியில் அரிவாளை மறைத்து வைத்தேன். அதன் பிறகு பைக்கில் கோவில்பட்டி வந்து மது குடிக்க செல்வோம் என்று கூறி மதன் குமாரை பைக்கில் மந்ததித்தோப்பு காட்டு பகுதிக்கு அழைத்து வந்தேன்.

அங்கு வைத்து இருவரும் மது அருந்தினோம். அதன்பிறகு நான், சிறுநீர் கழித்து வருவதாக மதன்குமாரிடம் கூறிச் சென்றேன். பின்னர் நான், ஏற்கனவே மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வந்தேன். அப்போது அவன் செல்போன் பார்த்துக் கொண்டிருந்தான். பின்னால் வந்த நான், மதன்குமாரின் கழுத்தில் ஓங்கி அரிவாளால் வெட்டினேன். இதில் அவன், தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன் பிறகு அரிவாளை அங்குள்ள கண்மாயில் வீசி விட்டு தப்பிச் சென்று விட்டேன். மறைந்திருந்த என்னை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர் என்றார். 

PREV
click me!

Recommended Stories

பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி... லஷ்கர்-இ-தொய்பா பயங்கர ஸ்கெட்ச்..! டெல்லியில் பரபரப்பு..!
சகோதரியை கண்டித்த ஆசிரியர்..! பள்ளியில் துப்பாக்கிச் சூட்டில் 22 குழந்தைகள் பலி..! பணயக் கைதிகளான ஆசிரியர்கள்..!